அமெரிக்காவை அடுத்து பிரிட்டனும் விமானங்களில் மின்னனு சாதனங்களுக்கு தடை

  • 22 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து நேரடியாக பிரிட்டனிற்கு வரும் விமானங்களில், பயணிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணினிகளுக்கு தடை விதித்து பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தடை டேப்லட் மற்றும் டிவிடி சாதனங்களுக்கும் பொருந்தும்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, எட்டு நாடுகளிலிருந்து நேரடியாக அமெரிக்கா வரும் விமானங்களில், பயணிகள் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் இம்மாதிரியான மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்கா: 8 நாடுகளின் விமானப் பயணிகள் மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை

பயங்கரவாத குழுக்கள் விமான சேவைகளை குறிவைப்பதாகவும் மேலும் பயணிகளின் பைகளின் மூலம் விமானங்களில் வெடிப்பொருட்களை கடத்த முயற்சிப்பதாகவும் வந்த உளவுத் துறை தகவலை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பிறகு பிரிட்டனும் இம்மாதிரியான தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்கு இந்த தடை அவசியம் என பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடை 16செ.மீட்டர் அளவைக் காட்டிலும் பெரிதாகவும். 9.3 செ.மீ அளவைக் காட்டிலும் அகலமாகவும் அல்லது 1.5 செ.மீ அளவைக் காட்டிலுமழமாகவும் இருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்