பிரிட்டன் நாடாளுமன்ற வளாக தாக்குதல்: நேரில் பார்த்தவர் சாட்சியம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டன் நாடாளுமன்ற வளாக தாக்குதல்: நேரில் பார்த்தவர் சாட்சியம்

  • 22 மார்ச் 2017

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதல்” சம்பவத்தை நேரில்பார்த்த மார்ட்டின் பியர் என்கிற லண்டன்வாசியின் சாட்சியம்.

“நான் லாம்பத் பாலத்தின் மீது இருந்து பார்த்தேன். திடீரென ஆம்புலன்ஸ்களும் காவல்துறை வாகன்ங்களும் அந்த பக்கம் சென்றன. சம்பவம் நடந்த பாலத்திற்கு அருகில் சென்று பார்த்தேன். அங்கே ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவருக்கு அருகே இன்னொரு பெண் காயமுற்று கிடந்தார். பிக் பென் கடிகாரத்துக்கு அருகில் ஒரு பெண் சாலையில் இருந்தார். அவரை தாண்டி மூன்று பேர் சாய்வாக அமர்ந்திருக்க மற்றவர்கள் அவர்களை கவனித்தபடி இருந்தனர். லண்டனில் இப்படி ஒரு காட்சியை பார்ப்பேன் என்றுநினைக்கவே இல்லை. அதிர்ச்சியளிக்கிறது.”