லண்டன் தாக்குதல்: பிரிட்டனுக்கு உலகத் தலைவர்கள் ஆதரவு

  • 23 மார்ச் 2017

பிரிட்டன் நாடாளுமன்ற அவைகளுக்கு அருகே புதன்கிழமை நடந்த மோசமான தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாத தாக்குதல்களால் அண்மையில் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் நாடளுமன்ற தாக்குதல்: இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு?

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்

படத்தின் காப்புரிமை EPA

தான் ஓட்டிச் சென்ற காரை மோதி மூன்று பாதசாரிகளை கொன்று, பின்னர் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ஒற்றை தாக்குதல்தாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டன் நாடாளுமன்ற வளாக தாக்குதல்: நேரில் பார்த்தவர் சாட்சியம்

கடந்த ஆண்டில் வாகனங்களை ஏற்றி மக்களை கொன்ற கொடும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், பிரிட்டனுக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AP
Image caption தங்கள் நாட்டில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெல்ஜியம் மக்கள் அஞ்சலி செலுத்திய காட்சி

தாக்குதலில் பாதிக்கப்பவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பாதுகாப்பு படையினரை பாராட்டியுள்ளார்.

லண்டன் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நள்ளிரவு முதல் அணைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்