அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: இதுவரை ஒருவர் பலி

ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 14 பேர் காயமடைந்தனர் என போலிஸார் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை CPD

இந்த துப்பாக்கிச் சூடு கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி போலிஸ் துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர் என துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"இரவு விடுதியில, கொடூரமான நிலைமையின் இடையில் பல வகையில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

"கொலைகள் தடுப்பு பிரிவு இரவு முழுவதும் இது குறித்து விசாரிக்கவுள்ளது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்