ரஷ்ய பிரதமருக்கு எதிராக போராடியவர்கள் கைது; அமெரிக்கா கண்டனம்

  • 27 மார்ச் 2017

ரஷியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கைது செய்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

அமைதியாக போராடியவர்களையும் மனித உரிமை கண்கானிப்பாளர்களையும் கைது செய்தது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் ரஷிய அரசு அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அரசு செய்தி தொடர்பாளர் கோரியுள்ளார்.

பிற செய்திகள்

`தீவிரவாதிகள் ஒளிந்துகொள்ளும் இடமாக வாட்ஸ்ஆப் இருக்கக் கூடாது

ஆபாச ஆடியோவால் பதவியிழந்த அமைச்சர்

அதிபர் புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவரான அலெக்ஸே நவால்னி கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதிபர் புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவரான அலெக்ஸே நவால்னி

ஞாயிறன்று, பிரதமர் டிமிட்ரி மட்வியேடெஃப் தனது அதிகாரத்தை தன்னை வளமைப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் பதவி விலக கோரி அந்த போராட்டம் நடைபெற்றது

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்