குழந்தைக்கு 'அல்லா' பெயர் - அங்கீகரிக்க மறுத்த அரசு துறை மீது அமெரிக்க தம்பதி வழக்கு

தங்களின் பெண் குழந்தைக்கு 'அல்லா' என்று பெயரிடுவதை தடுத்தது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு தம்பதியர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Image copyrightACLU

22 மாதமாகும் இப்பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க ஜார்ஜியா மாநில பொது சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

தங்கள் குழந்தைக்கு அதிகாரபூர்வமான பெயர் இல்லாமல் இருப்பது தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று குழந்தையின் பெற்றோரான எலிசபெத் ஹாண்டி மற்றும் பிலால் வாக் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த அரசு அதிகாரிகள், ஜாலிகா கிரேஸ்ஃபுல் லோரைனா அல்லா என்ற குழந்தையின் பெயரில் உள்ள குடும்பப் பெயர் ஹாண்டி, வாக் அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ரொஹிஞ்சா முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்: விசாரணை அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்று பொருளாகும்.

'அல்லா' என்ற பெயர் புனிதமாக இருப்பதால், குழந்தைக்கு அப்பெயரை தாங்கள் சூட்டியதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

''இது முற்றிலும் நியாயமற்றது மற்றும் எங்களின் உரிமைகளை மறுக்கும் அத்துமீறலாகும்'' என்று தங்கள் குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை அங்கீகரிக்க அரசுத்துறை மறுத்துள்ளது குறித்து குழந்தையின் தந்தையான வாக் தெரிவித்தார்.

ஆனால், பொது சுகாதாரத்துறையின் வழக்கறிஞர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ''ஜார்ஜியா சட்ட விதிகளின்படி, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயருடன் வரும் குடும்பப் பெயரில் தந்தை அல்லது தாயின் பெயர் இருத்தல் அவசியம்'' என்று தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்