ஒபாமாவின் பசுமைத்திட்டத்தை ரத்து செய்தார் ட்ரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒபாமாவின் பசுமைத்திட்டத்தை ரத்து செய்தார் ட்ரம்ப்

புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த திட்டத்தின் முக்கிய பகுதிகளை ரத்து செய்யும் உத்தரவில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திடுகிறார்.

ஒபாமாவின் “பசுமைத்திட்டம்” அமெரிக்க பொருளாதாரத்தை பாதிப்பதாக கூறும் அவர் அதனாலேயே அதை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க உள்கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சுமார் இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படும் அமெரிக்க உள்கட்டுமான புனரமைப்புப்பணிகளை முன்னெடுப்பது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? ஆராய்கிறது பிபிசி.