ஆதரவு மற்றும் எதிர்ப்புக்கிடையே பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஆணையில் டிரம்ப் கையெழுத்து

  • 29 மார்ச் 2017

பருவநிலை மாற்றம் தொடர்பான தடைகளை நோக்கமாக கொண்டு, முன்னாள் அதிபர் ஒபாமாவின் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளை திரும்பப் பெறும் நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

Image caption பருவநிலை மாற்றம்: புதிய நிர்வாக ஆணையில் டிரம்ப் கையெழுத்து

இதன் மூலம் நிலக்கரி எரிசக்தி மீதான தடை நடவடிக்கைப் போரையும், பணியிடங்களை கொல்லும் விதிகளையும் முடிவுக்கு கொண்டு வர இயலும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'நிலக்கரி எரிசக்தி மீதான தடை நடவடிக்கைப் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்'

நிலக்கரிச் சுரங்கப் பணியாளர்கள் புடை சூழ பேசிய டிரம்ப், இந்த புதிய நிர்வாக ஆணை பல புதிய பணிகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

அமலுக்கு வந்தது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்

அதிபர் டிரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கையை வணிக குழுமங்கள் பாராட்டியுள்ள சூழலில், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சாரம் மேற்கொள்வோர் இதனை கண்டித்துள்ளனர்.

இதனிடையே, இந்த புதிய நிர்வாக ஆணை தொடர்பான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன்பாக சில நூறு ஆர்ப்பாட்டக்காரார்கள் குழுமியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்