போலி பணிகள் குற்றச்சாட்டு: பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளரின் மனைவி மீது விசாரணை

போலி பணிகளை உருவாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு மத்தியில், பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரான்ஸுவா ஃபியாங்கின் மனைவி அதிகாரபூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிரான்ஸுவா ஃபியாங் மற்றும் அவரது மனைவி

ஒரு நாள் முழுவதும் பிரான்ஸுவா ஃபியாங்கின் மனைவி பினேலோப் ஃபியாங்கை நீதிபதிகள் விசாரணை செய்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரஞ்சு அதிபர் தேர்தல்: வெல்வாரா வலதுசாரி வேட்பாளர்?

கடந்த மாதத்தில் பினேலோப்பின் கணவரும், பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளருமான பிரான்ஸுவா ஃபியாங் அதிகாரபூர்வ நீதி விசாரணையின் கீழ் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்யாத பணிகளை செய்ததாக போலியாக கணக்கு காட்டி பல ஆயிரம் யூரோக்களை தன் குடும்பத்துக்கு சம்பளமாக கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் பிரான்ஸுவா ஃபியாங் மீது வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரான்ஸுவா ஃபியாங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்