காணாமல் போனவரின் உடல் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து மீட்பு

  • 29 மார்ச் 2017

இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை West Sulawesi Police

ஞாயிறன்று சூலவேசி தீவில் பனைமர எண்ணெய் எடுக்கச் சென்ற போது அக்பர் காணாமல் போனார்.

அந்த 25 வயது நபரை தேடும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு பெரிய மலைப் பாம்பைக் கண்டதாகவும், அது அம்மனிதரை விழுங்கியிருக்கலாம் என தாங்கள் சந்தேகித்ததாகவும் பிபிசி இந்தோனீஷிய சேவையிடம் போலிஸார் தெரிவித்தனர்.

அந்த மலைப்பாம்பு 7 மீட்டர் உயரும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன; பாம்பின் உடலை அறுத்து அந்த மனிதரின் உடம்பு வெளியே எடுக்கப்பட்டது.

பிபிசியின் பிற செய்திகள்

இந்தோனேஷியா: காட்டுத்தீயிலிருந்து காக்கும் நீர்வேலி

சிலந்திகள் சாப்பிடும் உணவின் அளவு - `மலை`க்க வைக்கும் தகவல்

உலகின் மிக நீளமான ஊர்வனவற்றில் மலைப்பாம்புகளும் ஒன்று; அவை தனது இரையை விழுங்குவதற்கு முன் அவர்களை இறுக்கி மூச்சுத் திணறச் செய்து பின் விழுங்கும்.

மலைப்பாம்புகள், அரிதாகவே மனிதர்களை கொன்று உண்ணும், இருப்பினும் சில சமயங்களில் குழந்தைகளையும் விலங்குகளையும் விழுங்கியதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த 24 மணி நேரங்களாக அக்பரை காணவில்லை என கிராமவாசிகள் போலிஸாரிடம் புகார் தெரிவித்ததாக சூலவேசி மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள போலிஸ் செய்தி தொடர்பாளர் மஷுரா, பிபிசி இந்தோனீஷிய சேவையிடம் தெரிவித்தார்.

அதன் பின், போலிஸார் தேடும் பணியில் ஈடுபட்ட போது, அக்பரின் குடும்பத்திற்கு சொந்தமான பனை மர தோப்பில் அந்த மலைப்பாம்பை கண்டனர்.

படத்தின் காப்புரிமை West Sulawesi Police

"அக்பரை போலிஸார் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அந்த கிராமவாசிகள் கால்வாய் ஒன்றில் நகர முடியாத நிலையில் இருந்த மலைப்பாம்பை கண்டனர். அந்த பாம்பு அக்பரை விழுங்கியிருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகங்கள் எழுந்தன. அவர்கள் பாம்பின் உடம்பை அறுத்த போது அக்பரின் உடல் உள்ளே இருந்தது" என மஷுரா தெரிவித்தார்.

பிரவிஜயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிய குர்னியவான், இந்த அளவு உள்ள மலைப்பாம்புகள் பொதுவாக பெரிய இரைகளான பன்றிகள் மற்றும் காட்டு நாய்களை வேட்டையாடும் என பிபிசி இந்தோனீஷிய சேவையிடம் தெரிவித்தார்.

பொதுவாக அவை மனிதர்கள் வாழும் பகுதியை தவிர்த்துவிடும் என்றும் ஆனால் பன்றிகள் மற்றும் மலைப்பாம்பு ஆகிய விலங்குகளை வேட்டையாட பனை மரத் தோப்புகளை சிறந்த இடமாக கருதும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்