சேற்றில் சிக்கிய யானைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேற்றில் சிக்கிய யானைகள்

  • 30 மார்ச் 2017

கம்போடியாவில் சகதி நிரம்பிய பள்ளத்திற்குள் யானைக்கூட்டம் ஒன்று சிக்கிக்கொண்டது.

குண்டுவிழுந்ததால் ஏற்பட்டிருந்த பழைய பள்ளத்தில் தேங்கிய நீரை குடிக்கவும் அதில் குளிக்கவும் இவை அதற்குள் இறங்கின.

அருகிவரும் ரக யானைகளால் அடர்த்தியான சேற்றிலிருந்து வெளியேற முடியாததால் வசமாய் சிக்கிக்கொண்டன.

விவசாயிகளும் வனவிலங்கு பணியாளர்களும் இவற்றை மீட்கும் பணியில் இறங்கினர்.

யானைகள் மீதும் பள்ளத்திற்குள்ளும் தண்ணீர் செலுத்தி சேற்றை இளகச்செய்ததோடு யானைகள் வெளியேற வழியையும் உருவாக்கினர்.

ஒவ்வொன்றாக மூன்று பெண் யானைகளும் எட்டு குட்டி யானைகளும் வெளியேறின.

ஆனால் சின்னஞ்சிறு குட்டி யானையால் மட்டும் பள்ளத்திலிருந்து மேலேறி தப்பும் வழி உயரத்தில் இருந்ததால் ஏறித்தப்ப முடியவில்லை; மிகவும் சிரமப்பட்டது.

ஆனாலும் மீட்புபணியாளர்களின் உதவியோடு அந்த குட்டியும் வெற்றிகரமாக பள்ளத்திலிருந்து மேலேறி தப்பியது.

பறவைகளுக்கு உணவளிக்க இணைந்த கைகள்