அம்மாக்கள் இல்லாத கிராமம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அம்மாக்கள் இல்லாத கிராமம்

  • 31 மார்ச் 2017

பதின்மவயது எலி சுசியாவதி தன் தாயைப்பார்த்து ஆறு ஆண்டுகளாகின்றன.

“அவருக்காக ஏங்கித்தவிக்கிறேன்; அனாதரவாக உணர்கிறேன்; அவரை நினைத்து பெரிதும் வருந்துகிறேன்”, என்கிறார் எலி சுசியாவதி.

அவர் பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டபின் அவரது தாயார் வேலைதேடி வெளிநாடு சென்றார்.

பதினோறு வயது முதலே எலி பாட்டியால் வளர்க்கப்படுகிறார்.

எலியின் தாயைப்போலவே அவர் வாழும் இந்தோனேஷிய கிராமத்தின் பெண்கள் பலர் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பியே அவர்களின் குடும்பங்கள் வாழ்கின்றன.

எலியின் தாயார் சுனையா முடிந்தபோதெல்லாம் இவர்களைப் பார்க்க வந்து செல்கிறார்.

“ஒவ்வொருமுறை ஊர் வந்து வேலைக்காக வெளிநாட்டுக்குத் திரும்பும்போதும் என் நெஞ்சே வெடித்துவிடுவதை போல் உணர்கிறேன்” என்கிறார் சுனையா.

“பலமுறை வந்துபோனாலும் ஒவ்வொரு முறையும் அதே வலியும் வேதனையுமே எனக்கு மிஞ்சுகின்றன” என்கிறார் சுனையா.

தன் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு ஈடுகட்டுமளவுக்கு மட்டுமே தன்னால் சம்பாதிக்க முடிவதால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதிலிருந்து தன்னால் விலக முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.