வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

வட கொரியாவிடமிருந்து வரும் அணு சோதனை அச்சுறுத்தலை சீனாவுடன் சேர்ந்தும் அல்லது சீனாவின் உதவி இல்லாமலும் அமெரிக்காவால் "தனியாக தீர்க்க" முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சீனா இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் அமெரிக்கா அதனை செய்யும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என பிரிட்டன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால் தனியாக வெற்றிப் பெற முடியுமா என்று அழுத்தமாக கேட்டதற்கு "முழுமையாக" என அவர் பதிலளித்தார்.

இந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பிற்கு முன்னதாக டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

"வட கொரியாவின் மீது சீனா மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. வட கொரியா தொடர்பாக தங்களுக்கு உதவ சீனா முடிவெடுக்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறு உதவினால் அது சீனாவிற்கு பலனை அளிக்கும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அது யாருக்கும் பலனளிக்காது" என டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரியா மற்றும் அமெரிக்கா நேருக்கு நேர் மோதுமா என்று கேட்டதற்கு இதற்குமேல் நான் எதுவும் கூற வேண்டியதில்லை, அமெரிக்கா வட கொரியாவை முழுமையாக தனித்து எதிர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

வட கொரியாவில் ராக்கெட் எஞ்சின் சோதனை: அணு ஏவுகணை உருவாக்க முயற்சியா?

தாயகம் திரும்பினார்கள், வட கொரியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள்

அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை

எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற தகவ்லகளை டிரம்ப் தெரிவிக்கவில்லை.

ஃப்ளோரிடாவில் வியாழனன்று ஷி ஜின்பிங்குடனான முக்கிய சந்திப்பு நடைபெறவிருக்கும் சில தினங்களுக்கு, முன்னதாக வந்துள்ள டிரம்பின் இந்த கருத்து, வட கொரியா நடத்திய அணு சோதனை குறித்து தெரிவித்த சமீபத்திய எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

அமெரிக்க பெருநில பரப்பை தாக்கும் வல்லமை கொண்ட நீண்ட தூர அணு ஏவுகணைகளை வட கொரியா உருவாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

டிரம்பின் உதவியாளராக இணைந்தார் மகள் இவான்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்