ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் மையப்பகுதியிலுள்ள சுரங்க ரயில்பாதையில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது ஒரு ரெயில்பெட்டி முழுமையாக சேதமடைந்துள்ளது. ஒரு கதவு சிதறியது.

இதில் குறைந்தது பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐம்பது பேர் காயமடைந்துள்ளனர். பலர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், குண்டுவெடிப்பால் வெளியான புகை அந்த ரயில் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்களுக்கு காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிப் பணியாளர்களும் உதவி வருகின்றனர்.

இதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத சூழலில், பயங்கரவாதம் உட்பட அனைத்து அம்சங்களும் ஆராயப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தெரிவித்துள்ளார்.