பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்

  • 3 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை AFP/Getty Images

தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளதாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

37 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலோர் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ரஷ்ய சுகாதர துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை - புதின்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் முயன்று வருவதாக இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டு மத்திய மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

வெடித்து சிதறிய ரயில் பெட்டி, ரயில் மேடைகளில் கிடக்கும் காயமுற்றோர் மற்றும் புகை நிறைந்த சாளரங்கள் வழியாக பயணிகள் வெளியேறுவதை இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள வோஸ்டானியா என்ற இன்னொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்டுபிடித்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு படைப்பிரிவுகள் செயலிழக்க செய்துள்ளன.

6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்!

அந்த மெட்ரோ வலையமைபிலுள்ள எல்லா நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அவை மூடப்பட்டுள்ளன.

காணொளி: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்