ரஷ்ய குண்டு வெடிப்பை நடத்திய சந்தேக நபர் கிர்கிஸ்தானை சேர்ந்தவர்

ரஷ்யாவில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரயிலில் குண்டு வைத்து 11 பேரை கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் கிர்கிஸ்தானை சேர்ந்தவர் என்றும் ரஷிய குடியுரிமை பெற்றவர் என்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பாதுகாப்பு சேவை தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty images

திங்கட்கிழமை மதியம், இரண்டு சுரங்க ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.

அருகாமையில் இருக்கும் மற்றொரு ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டு செயலிழக்கப்பட்டது.

சந்தேக நபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் ஆனால் அவர் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியா என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ரஷிய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் 11 பேரை பலிவாங்கிய ரயில் நிலைய குண்டு வெடிப்பு (புகைப்பட தொகுப்பு)

குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை - புதின்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

"மேலும் விசாரணைகளுக்காக, கிர்கிஸ்தானின் பாதுகாப்பு சேவைகள், ரஷ்ய ரகசிய சேவை அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக" அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ரஷ்ய விசாரணையாளர்கள் இச்சம்பவம் குறித்து குறைவான தகவல்களையே வெளியிட்டுள்ளனர்; இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுபேற்கவில்லை;

குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றபோது தனது சொந்த ஊரில் இருந்த அதிபர் புதின், திங்கள் மாலை, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தற்காலிக நினைவுச் சின்னத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உலக தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்; டொனால்ட் டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், குற்றவாளிகளை தண்டிப்பதற்கு "தனது முழு ஆதரவையும்" வழங்கியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதிபர் டிரம்ப் மற்றும் புதின் ஆகிய இருவரும், "பயங்கரவாதம், உறுதியாகவும் விரைவாவும் வீழ்த்தப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டதாக" அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

இது ஒரு "காட்டு மிராண்டித்தனமான" செயல் என ஜெர்மன் சான்செலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கையின் தலைவர் ஃபெடரீக்கா மொகரீனே, ஐரோப்பாவின் மக்கள் இது குறித்து வருந்துவதாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்