கொசுக்கடியிலிருந்து தப்ப கொசுவலை படுக்கை ஆராய்ச்சி

  • 5 ஏப்ரல் 2017

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், கொசுக்கடியை தடுக்கும் கொசுவலை படுக்கை ஆராய்ச்சி..

கொசு ஆராய்ச்சி

அனோஃபிலீஸ் கொசுக்களை ஒழிப்பதற்கான போராட்டம், கடந்த பல பதிற்றாண்டுகள் விஞ்ஞானிகளை தீவிர செயல்பாடுகளில் வைத்திருந்தது. இந்தக் கொசுக்கள்தான், மலேரியாவைப் பரப்பி, உலக அளவில், ஆண்டுக்கு 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் இறப்புக்குக் காரணமாக அமைகிறது.

இப்போது, புதிய அச்சுறுத்தல் ஒன்று உருவாகியிருக்கிறது. பூச்சி மருந்து எதிர்ப்பு சக்தி கொசுக்களிடையே அதிகரித்து வருகிறது. கொசு எதிர்ப்பு மருந்துகளில் ரசாயனப் பயன்பாடு அதிகரித்து வருவதே அதற்குக் காரணமாக உள்ளது. கொசுக்களிடையே பூச்சிமருந்து எதிர்ப்பு சக்தி, 60 நாடுகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

கொசுக்களுக்கு எதிரான போராட்டத்தில் நமது கை ஓங்க வேண்டுமானால், கொசுக்களின் குணங்களைப் புரிந்து கொள்வது அவசியம்.

''கொசு வலையைச் சுற்றி கொசுக்கள் பறக்கும் பாதையை ஆய்வு செய்ய, அகச்சிவப்பு கேமராக்களைப் பயன்படுத்துகிறோம். கொசுக்களின் செயல்பாடுகளை இவ்வளவு பெரிய அளவில் வீடியோ பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை'' என்று லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர் ஜோஸி ஸ்கேல் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தக் கொசுக்கள், படுக்கை கொசு வலையோடு எவ்வளவு நேரம் தொடர்பில் இருக்கின்றன, அந்த வலைகளில் உள்ள கொசுத்தடுப்பு மருந்துகள், அந்தக் கொசுக்கள், எவ்வளவு நேரம் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை அணுக முடியாமல் தடுக்கிறது என்பது குறித்து கொசு டயரித் திட்டம் ஆராய்கிறது.

''பூச்சி மருந்து வேலை செய்ய வேண்டுமானால், கொசுக்கள் அந்த வலையைத் தொட வேண்டும். லேசாகத் தொட்டுவிட்டுச் செல்வது தீர்வாகாது. அந்தக் கொசு கொல்லப்பட எவ்வளவு நேரம் அந்த வலையோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று ஆராய்வது, நமது பணிகளில் ஒன்று '' என்கிறார் பார்கர்.

சிலந்திகள் சாப்பிடும் உணவின் அளவு - `மலை`க்க வைக்கும் தகவல்

மேலும் திறன் படைத்த புதிய கொசுவலைகள், இழைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு ஆய்வு வழிவகுக்கும். இதன் மூலம், சிறு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்க முடியும்.

"கொசு வலைகள், ஒரு தடுப்பை ஏற்படுத்துகின்றன. தன் மீது வந்து அமரும் கொசுக்களை அந்த வலைகள் கொல்லாவிட்டால், அந்தக் கொசுக்கள் தொடர்ந்து வெளியில் காத்திருந்து, நீங்கள் விழித்தவுடன் கடிக்கும்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்