சிரியா: `ரசாயன' தாக்குதலில் 58 பேர் பலி

இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட நச்சுவாயு தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் வட பகுதியிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP

இந்த வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பொது மக்கள் என்று மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா.

கான் ஷேக்ஹளன் நகரில் நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக உள்ளூர் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

பலர், பெரும்பாலும் குழந்தைகள், தெருக்களில் திக்குமுக்காடுவதாக அவர் கூறியுள்ளார்.

விமானம் விழுவதற்கு முன்னர் வெளியேறிய சிரியா ராணுவ விமானிக்கு சிகிச்சை

எதிரணியினர் மீது அரசு ரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் அவையும், பிறரும் அரசை குற்றஞ்சாட்டி வந்துள்ளனர்.

அலெப்போ போரில் ரசாயன ஆயுதங்கள் : சிரியா அரசாங்கம் மீது ஐ.நா குற்றச்சாட்டு

இதனை மறுத்திருக்கும் அரசு, தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிர் தப்பியோருக்கு சிசிக்சை அளித்து கொண்டிருந்தோரை குறிவைத்து விமானத்தில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP

இது ரசாயன தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டால், சிரியா போர் தொடங்கி நடந்து வரும் இந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் கொடிய ரசாயன தாக்குதலாக இருக்கும்.

உள்ளூர் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரியான முகமது ரசூல் காலை 6:45 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

67 பேர் இறந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், எதிரணியினருக்கு ஆதரவான ஸ்டெப் நியூஸ் நிறுவனம் 100 பேர் இறந்துள்ளதாக குறித்துள்ளது.

இறந்தோரில் 11 பேர் குழந்தைகள் என்று சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரிடம் மயக்கம், வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

அங்கு வீசப்பட்ட மூலப்பொருட்களின் இயல்பை உறுதிபடுத்த முடியவில்லை என்று சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தள்ள நிலையில், எலெக்ட்ரோ மேக்னட்டிக் கம்பட்டிபிலிட்டி (EMC) இதுவொரு நச்சு ரசாயனமான சாரின் என்று எண்ணுவதாக கூறியுள்ளது.

இட்லிப் மாகாணத்தில் கிளாச்சியாளர்களின் துருப்புகள் மற்றும் அல் கய்தாவோடு தொடர்புடைய ஜிகாதி குழுவான ஹயாத் தாக்ரிர் அல் ஷாம் கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்த விமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காணொளி: சிரியா போர்நிறுத்தம் நிலைக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரிய போர்நிறுத்தம் நிலைக்குமா? நீடிக்குமா?

இந்த செய்தியையும் நீங்கள் விரும்பலாம்

ஆதரவற்ற சிரியா நாட்டவரை அகதிகளாக எடுக்க இஸ்ரேல் திட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்