70 ஆயிரம் ரூபாய் கைப்பையில் மீன் வாங்கி குஷியான பாட்டி!

தைவானில் விலையுர்ந்த "லுயி வாயிடாங்" கைப்பையை தனது பாட்டி மீன் வாங்க பயன்படுத்திய சம்பவத்தை ஒருவர் கூறும் பதிவு சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சீன மொழியில் பதிவிடப்பட்டுள்ள அந்த பதிவில், தனது பாட்டி லுயி வாயிடாங், ஒரு விலையுர்ந்த கைப்பை என்பதை அறியாமல் அதில் காய்கறி மற்றும் மீன் வாங்கி கொண்டு தன்னிடம் மகிழ்ச்சியாக கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த புதிய பை தண்ணீரை கிரகிக்கவில்லை என்றும் ஆனால் சிறிது கனமாக இருக்கிறது என்றும் பாட்டி தெரிவித்திருக்கிறார்.

ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் ஒரு விலையுயர்ந்த ஃபேஷன் சின்னமாக லுயி வாயிடாங் பொருட்கள் கருதப்படுகிறது. மேலும் சில்லறை கடையில் அதன் விலை 900 பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் சுமார் 70 ஆயிரம் ரூபாய்.

ஆக்டோபஸை சாப்பிடும் டால்ஃபின்களின் தந்திரம்

அவரின் பாட்டி நீண்ட நாட்களாக ஒரே கைப்பையை பயன்படுத்திக் கொண்டிருந்ததால் அவருக்கு ஒரு புதிய விலை உயர்ந்த கைப்பையை வாங்கி கொடுக்க விரும்பியதாக அந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது.

கைப்பையில் மீன்கள் மற்றும் காய்கறிகளுடன் தன்னை பார்த்து கையசைத்த பாட்டியை கண்டு தான் "பேச்சற்று" போனதாகவும், ஆனால் கைப்பை குறித்து மகிழ்ச்சியாக காணப்பட்டதால், பாட்டியிடம் தான் எதையும் தெரியப்படுத்த விரும்பவில்லை என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் அந்த பதிவிற்கு 31,000க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

மூளை ஆற்றலை அழிக்கிறதா சாட்-நாவ் வழிகாட்டி?

"உங்களது பாட்டிதான் கடைத் தெருவில் மிக ஃபேஷனான ஆளாக தெரிந்திருப்பார்; அவர் மிகவும் பெருமையுடன் நடந்து வந்திருக்கக்கூடும் என்றும் அந்த மீனின் விலையும் உயர்ந்துவிட்டது" என்றும் நகைச்சுவையாக ஒருவர் இந்த பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்.

"லுயி வாயிடாங்" பைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பது மிக உண்மையானதாக இருக்கிறது என தனது பதிவை முடித்துள்ளார் அந்த பாசக்கார பேரன்.

இந்தச் செய்தியும் படிக்கப் பிடிக்கலாம்:

மெட்ரோ ரயிலில் `மிரட்டும்' இருக்கை

இந்த கவர்ச்சி மிகுந்த செய்தியை பற்றி காணொளி கடந்த 10 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை YOUTUBE

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்