ரஷ்ய மெட்ரோ தாக்குதல்: சந்தேக நபரின் அடையாளம் தெரிந்தது

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பொக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு காரணமான கிர்கிஸ்தானை சேர்ந்த முக்கிய சந்தேக நபரை, 22 வயதான அக்பர்ட்சொன் ஜாலிலோஃப் என்று உறுதி செய்திருப்பதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரஷ்ய ஊடகங்கள் தாக்குதல்தாரி என சந்தேகப்படுபவராக தெரிவிப்பவரின் புகைப்படம்

தடவியல் சாட்சியம் மற்றும் பாதுகாப்பு கேமரா பதிவுகள் ஆகியவை இந்த நபரை வெடிக்காத இரண்டாவது கருவியுடன் தொடர்புடையவராக காட்டுவதாக புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய குண்டு வெடிப்பை நடத்திய சந்தேக நபர் கிர்கிஸ்தானை சேர்ந்தவர்

ரஷ்யாவில் 11 பேரை பலிவாங்கிய ரயில் நிலைய குண்டு வெடிப்பு (புகைப்பட தொகுப்பு)

அவர் தற்கொலை தாக்குதல்தாரியா அல்லது குறித்த நேரத்திற்கு முன்னர் குண்டுவெடித்திருந்தால் அவர் கொல்லப்ட்டிருப்பாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை EPA

இந்த தாக்குதல் சிரியா மீதான ரஷ்யாவின் கொள்கைக்காக பழிவாங்குவதற்கு நடத்தப்பட்டதாக அனுமானிப்பது, குறைகாணுவது, கீழ்தரமானது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்திருக்கிறார்.

பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்

இந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

இதற்கு முன்னால் இத்தகைய தாக்குதல்களை சந்தித்தது இல்லை என்பதால் இந்த தாக்குதலால் நகரமே பீதியில் உறைந்திருப்பதாக பிபிசி செய்தியாளார் தெரிவித்திருக்கிறார்.

காணொளி: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

இந்த செய்திகளில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படலாம்

வட மாநில மைல் கற்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா?

இந்தியில் மைல் கல் எதற்காக?: பொன். ராதாகிருஷ்ணன் புது விளக்கம்

சிரியா: `ரசாயன' தாக்குதலில் 58 பேர் பலி

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்?

தன்னை காப்பாற்றிய சிப்பாயை 60 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார் தலாய் லாமா

இறைச்சிக் கூடங்களை என்ன செய்யலாம்? பாபா ராம்தேவ் கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்