டயானா வழியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தில் இளவரசர் ஹாரி

  • 6 ஏப்ரல் 2017

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள், இவ்வுலகில் இருந்து நிலக்கண்ணிவெடிகளை அகற்றிடும் திட்டத்துக்கு பிரிட்டன் அரசு 100 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்யவுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இளவரசர் ஹாரி முனைப்புக் காட்டி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப் படம்

நிலக்கண்ணி வெடிகளை அகற்றிடும் திட்டம் குறித்து சர்வதேச வளர்ச்சி அமைப்பின் செயலாளர் பிரீத்தி பட்டேல் குறிப்பிடுகையில், இந்த மூன்றாண்டு நிதி முதலீடு திட்டம் இன்னமும் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை சமாளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார்.

சிரியா: `ரசாயன' தாக்குதலில் 58 பேர் பலி

நிலக்கண்ணி வெடிகளை அகற்றிடும் திட்டம் தொடர்பான நிதி முதலீட்டை உறுதியளித்தன் மூலம், பிரிட்டன் அரசு தைரியமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கூறிய இளவரசர் ஹாரி, இது தொடர்பாக மேலும் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளதாக கூறினார்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை ; இளவரசர் ஹாரியின் நெகிழ்ச்சி பயணம்

இது தொடர்பாக கென்னிங்ஸ்டன் அரண்மனையில் பிரீத்தி பட்டேல் உரையாற்றுகையில், இந்த திட்டம் 8 லட்சம் மக்களை காப்பாற்ற உதவிடும் என்று தெரிவித்தார்.

வெடிக்காத நிலக்கண்ணி வெடி ஆபத்துடன் 60 மில்லியன் மக்கள் இன்னமும் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இளவரசர் ஹாரி, மேலும் கூறியுள்ளார்.

Image caption நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்துக்கு இளவரசர் ஹாரி ஆதரவு

அவர் மேலும் குறிப்பிடுகையில், ''இந்த உலகின் ஏதாவது ஒரு மூலையில் உள்ள சில பெற்றோர், விவசாயத்துக்காக நிலக்கண்ணி வெடிகள் அடங்கிய நிலத்தை உழும் ஆபத்தை சந்திப்பது அல்லது தங்கள் குழந்தைகளை பட்டினியாக இருக்க விடுவது என்ற இரண்டு கடுமையான வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையில் தற்போது உள்ளனர்'' என்று கூறினார்.

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

''பல உலக நாடுகளும் 20 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பல உறுதிமொழிகளை, இத்தகைய சோகங்கள் வேர் அறுப்பது போல் அமைகிறது'' என்று இளவரசர் ஹாரி மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு

வரும் 2025-ஆம் ஆண்டு வரை, நிலக்கண்ணி வெடிகளை அகற்ற, ஓவ்வொரு ஆண்டும் கூடுதலாக 100 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றும், தொழில்முறை கால்பந்து அணி ஒன்றுக்காக ஒரு கால்பந்து வீரரை ஒப்பந்தம் செய்ய ஆகும் செலவு இது என்றும் ஹாரி விளக்கமளித்தார்.

டயானாவின் உறுதி

நிலக்கண்ணி வெடிகள் பயன்பாட்டுக்கு சர்வதேச தடை கொண்டு வருவதற்கு அறைக்கூவல் விடுத்த இளவரசர் ஹாரியின் தாயான மறைந்த இளவரசி டயானா, நிலக்கண்ணி வெடிகள் பயன்பாடு பிரச்சனை குறித்து பிரசாரம் செய்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்

இது தொடர்பாக டயானாவின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்த பட்டேல், டயானா தைரியமான ஒரு பெண்மணி என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட டயானா

கடந்த 1997-ஆம் ஆண்டில், மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஹாலோ அறக்கட்டளையால் சோதனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட அங்கோலாவில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் இருந்த ஒரு சுரங்கப் பாதையில் டயானா நடந்து சென்றது புகைப்படம் எடுக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள்: கிரிக்கெட்டின் பலமா, பலவீனமா?

தனது கடைசி வெளிநாட்டு பயணத்தில், நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்தது பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க டயானா போஸ்னியா சென்றது குறிப்பிடத்தக்கது.

நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ஒப்பந்தம்

மனிதர்களுக்கு எதிரான நிலக்கண்ணிவெடிகளை தயாரிக்க மற்றும் பயன்படுத்த தடை கோரும் ஒப்பந்தத்தில் 128 நாடுகள் கையெழுத்திட்டதிலிருந்து, ஏறக்குறைய 30 நாடுகள் நிலக்கண்ணி வெடிகள் அறவே இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஃபிரான்ஸ் திருவிழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்து (காணொளி)

நிலக்கண்ணி வெடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்த நாடுகளாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு நிலக்கண்ணி வெடிகள் காரணமாக அமைகின்றன

நிலக்கண்ணி வெடி மாசு அடங்கிய நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் கீழ்கண்ட பட்டியலில் உள்ளடங்கும்:-

மிகவும் பெரிய அளவில் (100 சதுர கிலோ மீட்டருக்கு அதிகமாக): அங்கோலா, சாட், ஆப்கானிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து, போஸ்னியா-ஹெர்சகோவின, குரோஷியா, துருக்கி, இராக், மேற்கு சஹாரா

அதிக அளவில் (20 முதல் 99 சதுர கிலோ மீட்டர் வரை):- எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், ஜிம்பாப்வே, கொலம்பியா, தென் கொரியா, இலங்கை, அல்ஜீரியா, லெபனான்

நடுத்தர அளவில் (5 முதல் 19 சதுர கிலோ மீட்டர் வரை):- சோமாலியா, ஃபால்க்லாண்ட் தீவுகள், சிலி, ஆர்மேனியா, டஜிகிஸ்தான், ஜோர்டான் , பாலத்தீனம்

குறைந்த அளவு (5 சதுர கிலோ மீட்டருக்கு குறைவாக):- காங்கோ ஜனநாயக குடியரசு, மொசாம்பிக், நைஜர், செனெகல், பெரு, செர்பியா, கொசோவோ, சைப்ரஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்