பத்தில் ஒருவர் புகைப்பழக்கத்தால் உயிரிழப்பு

உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் பத்தில் ஒரு சதவிகிதம் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் சரிபாதி பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லேன்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், புகையிலை தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், சுமார் ஒரு பில்லியன் மக்கள் ஆண்களில் நான்கு பேரில் ஒருவரும், பெண்களில் இருபது பேரில் ஒருவரும் தினமும் புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேசமயம் பொதுமக்கள் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட சில நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

புகையிலைக்கு அதிக வரிவிதிப்பு, பாக்கெட்டுகள் மீது எச்சரிக்கைகள் மற்றும் கல்வித்திட்டங்கள் போன்ற வழிமுறைகளையே இந்த நாடுகள் பெரும்பாலும் கையாண்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்