சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்பாடு உறுதியானதாக துருக்கி தகவல்

  • 6 ஏப்ரல் 2017

கடந்த செவ்வாய்க்கிழமையன்று வட சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோரின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளே தாக்குதலுக்குக் காரணம் என்று கண்டுபிடிப்புகளை வெளியிட்ட துருக்கியின் நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் தெரிவித்தார்.

ஆனால், எந்த ரசாயானத்தை படையினர் பயன்படுத்தினர் என்பதையோ அல்லது இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து சிரியா அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா வெளியிட்ட கருத்துக்களுக்கு நேர்மறையான கருத்துக்களையோ போஸ்டாக் தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

போராளிகள் ரசாயன ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருந்த இடத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டபோது நச்சு வாயு வெளியேறியதாக சிரியா அரசாங்கம் மற்றும் ரஷ்யா கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்