சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிலந்தி வலை பட்டுக்களை உருவாக்க முயற்சி

  • 7 ஏப்ரல் 2017

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல்.

பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், சிலந்தி வலை பட்டு.

சிலந்தி வலைபட்டு

ஆய்வகத்தில் சிலந்தி வலைகளாக பின்னப்பட்ட சிலந்தி பட்டு, அடுத்த தலைமுறைக்கான உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களுக்கான முக்கிய அம்சமாக இருக்கிறது.

பூமியை நெருங்கும் ஆபத்து: விண்வெளிக் குப்பைகள்

"சிலந்தி பட்டுகள், சுமார் 300 மில்லியன் ஆண்டுகளாக உள்ளது. மேலும் சிலந்திகள் பெரிய அளவு பயன்களை சிறிய அளவு பொருட்களை கொண்டு உருவாக்குகிறது." என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பட்டு குழுமத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர் பெத் மார்டிமர் தெரிவிக்கிறார்.

பொதுவாக இரையை பிடிக்க உருவாக்கப்படும் சிலந்தி வலை ஒரு வித புரதத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் பட்டின் மூலக்கூறு அமைப்பை அறிய ஆய்வுகள் உதவி வருகிறது; மேலும் மனிதனுக்குத் தேவையான பயன்பாடுகள் அன்றாடம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இயற்கையில் உள்ள சில பொருட்களுக்கு சிலந்திப் பட்டிற்கு உள்ளதைப் போன்று ஆற்றலை கிரகிக்கும் திறன் உள்ளது என விஞ்ஞானிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவை மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்களுடன் சேர்த்தால் அது அதிக தாங்கும் திறன் கொண்ட இழைகளாக மாறும்.

"சிந்தெடிக் பாலிமர்களை காட்டிலும் இந்த பட்டு, ஆயிரம் மடங்கு அதிக ஆற்றல் திறன் கொண்டதாகும், ஆனால் தற்போது பொருளாதார ரீதியாக அதை சாத்தியமாக்குவது என்பதே சவாலாக உள்ளது" என மார்டிமெர் தெரிவித்தார்.

வலையை சூழ்ந்துள்ள சிறிய பசை துளிகள் அந்த சிலந்தி வலையை மிகவும் ஒட்டும் தன்மை கொண்டதாக மாற்றுகிறது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பங்களை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு அது ஊக்கமளிக்கிறது. மேலும் சிலந்தி வலை தனது நீளத்தை விட அதிக அளவு இழுக்கும் தன்மையை அந்த பசை, வழங்குகிறது.

கொசுக்கடியிலிருந்து தப்ப கொசுவலை படுக்கை

சூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4டி எக்ஸ்-ரே

மேலும் பட்டுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது; முழங்கால் குறுத்தெலும்பு மீண்டும் வளர்வதற்கு பட்டு பயன்படுத்துவது குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இசைக் கலைஞர்களும் பயன்பெறுவர். இந்த சிலந்தி வலையை வயலின் கம்பிகளில் பயன்படுத்தலாம். சிலந்தி வலையில் மாட்டிக் கொண்ட ஒரு உயிரினம் அதிலிருந்து தப்பி முயலும் போது அது ஒரு வித அதிர்வை வலையில் ஏற்படுத்துகிறது. மேலும் சிலந்திக்கு இரை மாட்டிக் கொண்டதற்கான அறிகுறியாக அது இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்