ஹார்லிக்ஸ் குடிக்க சரியான நேரம் காலையா, இரவா?

  • 7 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை Horlicks

"1906 -ஆம் ஆண்டிலிருந்து, ஆறுதலான, இதமான, உற்சாகமூட்டக்கூடிய பாம்".

கடந்த வருடம் பிரிட்டனில் வெளியான ஹார்லிக்ஸ் கோப்பையில், விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் இவை.

பிரிட்டனில் முக்கியமாக பார்லியை கொண்டு தயாரிக்கும் இந்த பானம், இரவு நேரத்தில் தூக்கத்தை வரவழைக்க உதவும் ஒரு சிறந்த பானம்.

ஆனால் இந்தியாவில் அது முழுவதுமாக தலைகீழாக விளம்பரப்படுத்தப்படுகிறது. "உயரமாகவும், வலிமையாகவும், புத்தி கூர்மையுடனும்" இருக்க ஹார்லிக்ஸ் பருகுங்கள் என ஹார்லிக்ஸின் இந்திய வலைத்தளத்தில் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது; மேலும் பள்ளிக் குழந்தைகள் அதிக ஆற்றலுடன் தாவிக் குதிப்பது போன்ற படங்கள் அதில் காணப்படுகின்றன.ப

இந்தியாவில் ஹார்லிக்ஸ் பானம், அன்றைய நாளில் குழந்தைகள் கற்பதற்கான அதிக ஆற்றலைத் தரக்கூடிய ஒரு காலை நேர பானமாக இருக்கிறது.

பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் ஹார்லிக்ஸ் தயாரிப்புகளும் ஒன்றாகத்தான் உள்ளது: அதன் மூலப்பொருட்கள் கோதுமை, பார்லி மற்றும் பால் ஆகியவற்றால்தான் தயாரிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Horlicks

ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும் பானம், காலை மற்றும் இரவு நேர பானங்களாக பயன்படுத்தப்படுவது "அதிகப்படியான முட்டாள்தனம் மற்றும் சந்தைப்படுத்துதல் திறனின்" சிறந்த எடுத்துக்காட்டு என ஆண்டிரியு வெல்க் தெரிவிக்கிறார்.

தயாரிப்பு பொருட்கள் சந்தையில் சிறப்பு இடம் பிடிப்பதற்கும், நற்பெயர் பெருவதற்கும் அதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதற்கும் உதவுவதே, பிராண்ட் ஆலோசனை நிறுவனமான லாண்டாரின் லண்டன் நிர்வாக இயக்குநரான வெல்கின் பணியாகும்.

நிறுவனங்கள் இந்நிலையை அடைய, சர்வதேச விரிவாக்கம் மட்டும்தான் ஒரே வழியாகும்; உள்ளூர் சந்தையில் விற்பனை குறைந்தால், போட்டிகள் குறைந்து காணப்படும் பகுதியில் அந்த பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்; அல்லது அதற்கான தேவை அதிகமுள்ள பகுதியில் அதன் விற்பனை அதிகரிக்கக்கூடும்.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்வதால், பொருட்களின் வெற்றி ஒரே ஒரு நாட்டின் சுகாதார வளர்ச்சியை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்!

ஆனால் ஒரு நிறுவனம், ஒரு நாட்டின் உள்ளூர் சந்தையிலிருந்து எவ்வாறு சர்வதேச பொருளாக மாறுகிறது?

இதற்கு ஹார்லிக்ஸின் வர்த்தகம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது; குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை கவர பல்வேறு தனிப்பட்ட வழிமுறைகளை கையாண்டது என வெல்க்ஸ் தெரிவிக்கிறார்.

இந்த மருந்து அல்லாத பானத்தால், மருந்துகளை விற்பனை செய்யும் பெருநிறுவனமான க்லாக்சோ ஸ்மித்க்லைனின் விற்பனைகள் அதிகப்படியாக உயர்ந்தது.

"உங்கள் பொருட்களை உலகம் முழுவதும் ஒரே மாதிரி விற்பனை செய்ய முடியாது, இந்த நிறுவனம் தனது உள்ளூர் வர்த்தகத்தை தாண்டியும் உலக அளவில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு விற்பனையை மேற்கொண்டு, தனித்து நிற்கிறது". என தெரிவிக்கிறார் வெல்க்.

இதையே வர்த்தக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச பொருளாக இருப்பதைவிட, பலதரப்பட்ட உள்ளூர் பொருளாக இருக்கவேண்டும் என்கிறார் வெல்க்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் அது சுலபம் அல்ல. இணைய ஏல வலைத்தளமான ஈபே உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று. அதன் இணைய வாடிக்கையாளர்கள் 167 மில்லியனாக உள்ளனர்; கடந்த வருடம் 9 பில்லியன் டாலருக்கு குறைவான லாபத்தை பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் முதல்முறையாக சீனாவில் அந்நிறுவனம் அறிமுகமான போது அது தோல்வியை சந்தித்தது. 2006 ஆம் ஆண்டு உள்ளூர் நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் சீனாவில் தொடங்கப்பட்ட, வெறும் இரண்டு வருடங்களில் தோல்வியை ஒப்புக் கொண்டு அந்நாட்டில் உள்ள தனது வலைத்தளத்தை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?

பின், நாட்டில் தனது இணைய ஏல வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளூர் நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்தது.

வலிமையான அமெரிக்க நிறுவனமாக இருப்பதனால் சீனாவில் நுழைந்தவுடன் அது வெற்றி பெறும் என்று நினைத்தது தவறு என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வீடு வாடகை குறித்த சேவையை வழங்கும் இணையமான ஏர்பிஎன்பி அந்த தவறை செய்ய விரும்பவில்லை. சீனாவில் அபியிங் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெயரின் பொருள் "அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்" என்பதாகும் மேலும் "அபியிங்" என்னும் வார்த்தை சீன மக்களால் எளிதாக உச்சரிக்க முடியும்.

படத்தின் காப்புரிமை Reuters

உலகமயமாக்குதல் குறித்து அடிக்கடி வரும் விமர்சனம், நாடுகளின் தனிப்பட்ட அடையாளங்களை அது அழிக்கிறது என்பதாகும். அனைத்து நகர்களும் ஒரே மாதிரியாக காட்சியளிக்கும் படியான நிலையை அது உருவாக்குகிறது.

ஜெர்மனியிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா வரை நீங்கள் ஒரே மாதிரியான கடைகளுக்கு செல்ல முடியும், ஒரே மாதிரியான வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும், ஒரே மாதிரியான உணவுகளை உண்ண முடியும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை காண முடியும் மேலும் ஒரே மாதிரியான இசையை கேட்கவும் முடியும்.

வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை ஸ்தாபிக்க விரும்பும் நிறுவனம் முதலில் மக்கள் மத்தியில் இருக்கும் அந்த எதிர்ப்பை தகர்க்க வேண்டும் என ஹவாஸ் விளம்பர முகமையின் ஐரோப்பா மற்றும் பிரிட்டன் குழுமத்தின் நிர்வாக தலைவரான ஹஸ்ட் கிறிஸ் தெரிவிக்கிறார்.

"மக்கள் சர்வதேச அளவில் ஒரே மாதிரியான பொருட்களை விரும்புவதில்லை. அவர்கள் அந்த பொருட்களுடன் தனக்கான ஒரு தொடர்பை விரும்புகிறார்கள்."

பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்

ஆனால் இது விலையுயர்ந்த பொருட்களான லூயி வாயிடாங் மற்றும் ஹர்மீஸ் போன்ற பொருட்களுக்கு பொருந்தாது. ஏனென்றால் அது வெளிநாட்டு நிறுவன பொருட்கள் என்பதுதான் அதன் அதிக விற்பனைக்கான காரணமாக உள்ளது.

ஆனால் மெக்டொனால்ட் மாதிரியான துரித உணவு நிறுவனங்கள் அனைத்து நாட்டிலும் ஒரே மாதிரிதான் காட்சியளிக்கிறது. ஆனால் அதனது பொருட்களை உள்ளூர் மயமாக்க அந்நிறுவனம் கடினமாக உழைத்து வருகிறது என அவர் தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் உணவுப்பட்டியல் உள்ளூர் உணவுகளுடன் ஒன்றிப்போவது மாதிரியும் மேலும் அந்நாட்டில் கிடைக்கும் பொருட்களை உணவில் சேர்ப்பதையும் மெக்டொனால்ட் நிறுவனம் பின்பற்றி வருகிறது.

ஆனால் தற்போது ஒரு நிறுவனம், தனது வியாபாரத்தை ஸ்தாபிக்கக் கூடிய நாடுகள் அதிகரித்துள்ளன. 1990களில் சர்வதேச அளவில் விரிவடைதல் என்றால் அது மேற்கத்திய ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நுழைவதாகும்; ஆனால் தற்போது அந்த பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகியவை இணைந்துள்ளன என ஹிர்ஸ்ட் தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

எதிர்காலத்தில் அதிக வளர்ச்சியை தரக்கூடிய பகுதிகள் மேற்கில் இன்னும் பெரிதாக புகழடையாமல் இருக்கின்றன என மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி தெரிவிக்கிறது.

சுமார் 400 இடைநிலையில் வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நகரங்கள், சுமார் 40 சதவீத அளவில் சர்வதேச வளர்ச்சியை உருவாக்கும் என மெக்கின்சி கணிக்கிறது.

சில வழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சி இதை மிகவும் எளிதானதாக மாற்றியுள்ளது, நிறுவனங்கள் தங்கள் கடைகளை நேரடியாக நிறுவவில்லை என்றாலும் அவை இணையம் வழியாக செயல்பட முடியும்.

சமீபத்திய ஆண்டு தரவரிசையில் உலகின் மிக மதிப்பிற்குரிய பொருள்களாக, பிராண்ட் ஆலோசனை நிறுவனமான இண்டர்பிராண்ட் வெளியிட்டுள்ள பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களே முதல் இடத்தை பிடிக்கின்றன.

70 ஆயிரம் ரூபாய் கைப்பையில் மீன் வாங்கி குஷியான பாட்டி!

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தொடர்ந்து நான்கு வருடங்களாக இந்தப் பட்டியலில் முதன்மை வகிக்கிறது.

இறுதியாக உள்ளூர் சந்தையில் ஒரு நிறுவனத்தை வெற்றி பெற வைக்கும் காரணங்களே அதன் சர்வதேச வெற்றிக்கும் காரணங்களாக அமைகின்றன என இண்டர் பிராண்ட் நிறுவனத்தின் திட்டமிடல் தலைவர் சைமர் காட்டரெல் தெரிவிக்கிறார்.

பொருட்களை உள்ளூர் சந்தைக்கு ஏற்றப்படி வடிவமைக்கும் போது அது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்பு சந்தையில் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

சூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4டி எக்ஸ்-ரே

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஆபத்து அதிகம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்