‘அரசுக்கு உதவுவதாகக்கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்கிறார்கள்’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்கிறார்கள்’

மியன்மாரில் இன சுத்திகரிப்பு எதுவும் நடக்கவில்லை என்றும், அரசாங்கத்து உதவுவதாகக்கூறி முஸ்லிம்களை சில முஸ்லிம்களே தான் கொல்கிறார்கள் என்றும் அந்நாட்டு ஆட்சிக்கு வழிகாட்டும் தலைவி ஆங் சான் சூசி தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயகத் தேர்தல் மூலம் ஆங் சான் சூசி தலைமையிலான கட்சி ஆட்சியைப்பிடித்து சுமார் ஒன்றரை ஆண்டாகிறது. தற்போது அவரது தலைமைத்துவம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த அவரது அமைதி விமர்சிக்கப்படுகிறது. ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். நாட்டின் இராணுவம் கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அவர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி.