சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா கண்டனம்

சிரியா விமானத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

செவ்வாய்க்கிழமை வடமேற்கு சிரியாவில் டஜன் கணக்கான பொதுமக்கள் பலியாக காரணமான ரசாயன தாக்குதலை நடத்த இந்த விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்

ஆனால், சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா அமெரிக்காவின் இந்த தாக்குதலை கண்டித்திருப்பதோடு, சிரியாவின் மீது நடுவானில் மோதல்களை தவிர்க்க போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது.

சிரியா அரசுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இட்லிப் மாகாணத்தில் கிளாச்சியாளர்களின் பிடியில் இருக்கும் கான் ஷேய்கயுன் நகரில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பல குழந்தைகள் உள்பட 80 பொது மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?

துறந்த கணவரை மீண்டும் அடைய வாடகை கணவர்களுடன் பாலுறவு துன்பம்

சிரியாவின் எதிரணியினரும், மேற்குலக நாடுகளும் சிரியா அரசு தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், சிரியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

காணொளி: சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்