அமெரிக்க தாக்குதலை அடுத்து சிரியா வான் பாதுகாப்பை வலுப்படுத்த ரஷ்யா முடிவு

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் விமானத்தளத்தின் மீது அமெரிக்கா நடத்தியஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, சிரியாவின் வான் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

சிரியாவில், அமெரிக்க ராணுவமும், ரஷ்ய ராணுவமும் வான் வழித் தாக்குதல்களில் ஈடுபடும்போது தவறுதலாக நடக்கும் மோதல்களை தவிர்க்கும் விதமாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்தியுள்ளது..

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா கண்டனம்

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்

அமெரிக்காவின் க்ரூஸ் ஏவுகணைகளில் பல, இலக்குகளை தாக்கத் தவறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நகரை விட்டு வெளியேறும் பொது மக்கள்

அமெரிக்க தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லபட்டுள்ளதாக சிரியாவின் தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்

தாக்குதல் நடத்தப்பட்ட ஷுய்ராட் விமானதளமும், அதையொட்டியிருந்த சில வீடுகளும் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக தாக்குதலை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

இந்த செய்திகளும் உங்களுக்கு ஆர்வம் ஊட்டலாம்:

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

சினிமா விமர்சனம்: காற்று வெளியிடை

சர்ச்சையைக் கிளப்பியது தென்னிந்தியர்கள் குறித்து பாஜக எம்.பி. தருண் விஜய் கருத்து

ராஜூமுருகனின் ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்