ஸ்டாக்ஹோம்: தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள்

  • 8 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை AFP
Image caption தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு கடைக்குள் லாரியை ஏற்றி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த அந்த `தொழில்நுட்ப கருவி ' என்ன என்பது குறித்து இப்போது தெரியாது என்றும், ஆனால் அது அங்கு இருக்கக் கூடாதது என்று மட்டுமே தெரியும் என்றும் தேசிய போலீஸ் ஆணையர் டேன் எலிசன் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் காவலில் உள்ள நபர், 39 வயதான உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று, ஸ்டாக்ஹோமில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் செலுத்தி நடத்தப்பட்ட லாரித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

சுவீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோவென், இது தீவிரவாதத் தாக்குதல் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளின்படி, எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்