ஸ்டாக்ஹோம் லாரி தாக்குதலில் கைதானவர் லாரி ஓட்டுநர்

  • 8 ஏப்ரல் 2017

ஸ்டாக்ஹோமில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மோசமான லாரி தாக்குதலை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் லாரி ஓட்டுநர் என்று சுவீடன் நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்டாக்ஹோம் பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் லாரி மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

நகரின் வடக்குப்பகுதியில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என சுவீடன் நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் லாரி மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 15 பேர் காயம் அடைந்தனர்.

லாரிக்குள் வெடிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்தியை தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

அருகே இருந்த உணவு விடுதியிலிருந்து லாரி கடத்தப்பட்டு, டோரோட்டிங்கட்டனில் பாதசாரிகள் செல்லும் நகரின் முக்கியமான சாலை ஒன்றில் நண்பகல் வேளையில் ஏலென்ஸ் பல்பொருள் அங்காடி முன் மோதியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்