ஸ்டாக்ஹோம் தாக்குதல்: கைதானவரோடு வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம்

படத்தின் காப்புரிமை ODD ANDERSEN/AFP/Getty Images
Image caption மன்னர் கால் குஸ்டாவ்

தாங்கள் கைது செய்திருக்கும் நபர் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியவர் என்று ஏறக்குறைய உறுதி செய்து விட்தாகவும், வேறு நபர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஸ்வீடன் போலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டிருப்பது உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 39 வயதான நபர் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய லாரியில் சந்தேகத்திற்குரிய கருவி ஒன்றை கண்டெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்டாக்ஹோம்: தாக்குதல் லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள்

ஸ்டாக்ஹோம் லாரி தாக்குதலில் கைதானவர் லாரி ஓட்டுநர்

ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்

ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் லாரியை ஓட்டி சென்று மக்கள் மீது மோதி நடத்தப்படப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமுற்றனர்.

மலர்களை வைத்து அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்திற்கு சென்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாக்குதலுக்கு பயன்படுத்திய லாரியில் சந்தேகத்திற்குரிய கருவி ஒன்றை கண்டெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பு

இந்த தாக்குதலால் நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதற்கு மக்கள் அளித்திருக்கும் மறுமொழி ஸ்வீடன் சமூகத்தின் வலிமையையும் மீட்சிபெற்று எழும் திறனையும் வெளிப்படுத்துகிறது என்று மன்னர் கால் குஸ்டாவ் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்திகள் உங்களை மேலும் வாசிக்க தூண்டலாம்

அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்

ராமர் - சீதை குறித்து ஆட்சேபகரமான கருத்தால் மதக்கலவரம்

வனப்பகுதியில் குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த சிறுமி

கந்தூரி உணவு நஞ்சான சம்பவம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

சிரியாவின் `சிதைவுக்கு' யார் காரணம்?

மூளை ஆராய்ச்சியில் ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள்

சிரியா மீது அடுத்த ராணுவ நடவடிக்கைக்கு தயார் : அமெரிக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்