சிரியா தாக்குதல் எதிரொலி: போரிஸ் ஜான்சனின் ரஷ்ய பயணம் திடீர் ரத்து

ரஷ்யாவுக்கு செல்ல 48 மணிநேரங்களே இருந்த நிலையில், தன்னுடைய பயணத்தை பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார்.

படத்தின் காப்புரிமை AFP

சிரியாவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அங்குள்ள நிலைமையை அடிப்படையில் மாற்றியுள்ளதாகவும், போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச ஆதரவை உருவாக்குவதே தன்னுடைய முதன்மை பணியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்க தேவையான அனைத்தையும் செய்ய ரஷ்யாவிடம் பிரிட்டன் கேட்டுகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவின் `சிதைவுக்கு' யார் காரணம்?

சிரியாவின் வான் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் - ரஷ்யா

"அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா வழங்கி வருகின்ற பாதுகாப்பை நினைத்து நாங்கள் கவலையடைகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஏப்ரல் 10-11 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி7 நாடுகளின் கூட்டத்திற்கு பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் தில்லர்சனின் ரஷ்ய பயணம் திட்டமிட்டப்படி நடைபெறவுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க ஒருங்கிணைந்த அளவில் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்க செய்ய இந்த கூட்டத்திற்கு போகாவிட்டாலும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா கண்டனம்

சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி

அடுத்த செயல்பாடுகளை ஆராய ஒத்த கருத்துடைய பிற நாடுகளை ஒன்றாகக் கொண்டு வருவதற்கு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

"உலகில் தொழிற்துறையில் முன்னிலையிலுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான ஜி7 நாடுகளின் கூட்டத்திற்கு பின்னர், தில்லர்சன் தெளிவான, ஒருங்கிணைந்த செய்தியை ரஷ்யாவுக்கு வழங்க முடியும்" என்று ஜான்சன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சிரியாவின் ஷாய்ராட் விமானத்தளத்தை அமெரிக்கா தாக்கியதில் ஏற்பட்ட சேதங்களை காட்டும் வகையில் பென்டகன் வெயிட்டுள்ள படம்

சிரியாவில் குறிப்பிட்ட ராணுவத் தளத்திலிருந்து ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த ராணுவத் தளம் மீது அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. அதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. ஆனால், ரஷ்யாவின் விமர்சனத்தை அமெரிக்கா கடுமையாக நிராகரித்துள்ளது.

ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட கான் ஷேய்குவன் நகரத்தை சுற்றி மீண்டும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில்,

தாக்கப்பட்ட விமான தளத்திலிருந்து மீண்டும் விமானங்கள் பறக்கத் தொடங்கியுள்ளதாக சிரியாவில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொளி: சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்