எகிப்து காப்டிக் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி

  • 9 ஏப்ரல் 2017

வட எகிப்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Google

கெய்ரோவில் வடக்கில் உள்ள டான் டா நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜின் காப்டிக் தேவாலாயத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இன்று ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 40 பேர் காயமடைந்திருப்பதாக பல சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

வெடிப்பிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால், சமீப ஆண்டுகளில் எகிப்தில் உள்ள கிறித்துவ சிறுபான்மையினரை குறிவைத்து இஸ்லாமியவாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், கெய்ரோவில் உள்ள காப்டிக் பேராலயத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்