ஜூலை முதல் மருந்துக் கடைகளில் கஞ்சா விற்பனை; ஒருவருக்கு மாதம் 40 கிராம்

  • 10 ஏப்ரல் 2017

உருகுவே நாட்டில், ஜூலை மாதம் முதல் மருந்துக்கடைகளில் கஞ்சா விற்பனை தொடங்குகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் மூலம், உலகிலேயே சட்டப்பூர்வமாக போதை மருந்தை பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக மருந்துக்கடைகளில் கிடைக்க அனுமதிக்கும் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான உருகுவே மாறவிருக்கிறது.

2013 ஆம் ஆண்டு கஞ்சா வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில இயற்றப்பட்ட சட்டத்தோடு இந்த நடவடிக்கை தொடங்கியது.

இருப்பினும், இந்த சட்டத்தை செயல்படுத்துவது மிகவும் மெதுவாகவே நடைபெற்றுள்ளது.

"ராணுவம் கஞ்சா வைத்தது; காவல்துறை கைது செய்தது"

போதைப் பொருள் பயன்பாடு : பிரபல நடிகர் ஜாக்கிசான் மகன் கைது

ஜூலை மாதம் முதல் கஞ்சாவை மருந்து கடைகளுக்கு விநியோகிப்பது தொடங்கும் என்று அதிபரின் உதவியாளர் குவன் அன்டர்ஸ் ரோபாலோ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கஞ்சா வாங்குபவர்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை தேசிய பதிவேட்டில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று இது தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஒரு கிராம் கஞ்சா 1.30 டாலர் (1 பவுண்ட்) என்ற விலையில் விற்கப்படவிருக்கிறது.

காணொளி: பிரிட்டனில் கஞ்சா வளர்க்க கடத்தி வரப்படும் வியட்நாமியர்கள்

'மதுவை விட அபாயகரமானது அல்ல கஞ்சா': அதிபர் ஒபாமா

உருகுவே தேசிய பதிவேட்டில் தங்களை பதிவு செய்வோர் அந்நாட்டின் குடிமக்களாக அல்லது நிரந்தர குடிவாசிகளாக இருத்தல் வேண்டும். ஒருவர் மாதத்திற்கு 40 கிராம் வரை அதிகபட்சமாக கஞ்சா வாங்கலாம்.

மரிஜூவானா எனப்படும் போதைப்பொருள் நாட்டின் மேற்பார்வையோடு அமையும் துறைகளில் விற்கப்படும்.

காணொளி: போதைப் பொருள் பயன்பாடு: ஜாக்கி சான் மகன் கைது

'பாலுறவுக்காக தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு கஞ்சா கொடுத்த காவலர்கள்'

கஞ்சா பயன்படுத்துவோர் அதனை தங்களுடைய வீட்டிலே வளர்க்கவும், அல்லது அதனை உருவாக்குகின்ற கூட்டுறவு மன்றங்களில் இணையவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது.

படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI/AFP/Getty Images

விலை வரையறுக்கப்பட்ட பொருளாக கஞ்சாவை விற்பதால் கிடைக்கின்ற பொருளாதார நன்மைகள் தொடர்பாக பல மருந்தாளுநர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

கஞ்சா, ஹெராயின் வரவைத் தடுக்க இலங்கையில் கடலோரக் காவல் நிலையம் தொடக்கம்

தங்களுடைய அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும், மாதாந்தர வரையறையை பராமரிப்பதையும் பற்றி புகார் அளித்து தேசிய பதிவேட்டில் தங்களை பதிவு செய்வதில் உருகுவே போதை மருந்து பயன்பாட்டாளர்கள் சிலர் தயங்குகின்றனர்.

16 மருந்துக்கடைகளில் ஒப்பந்தம் ஒன்றை உருகுவே அரசு உருவாக்கியுள்ளது. ஆனால், இன்னும் அதிக மருந்துக்கடைகளை அதில் சேர்க்க விரும்புகிறது.

கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை நடவடிக்கை

போதை மருந்து பயன்படுத்துவோர் தங்கள் பெயர்களை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு முன்னால், பொது சுகாதார பரப்புரை ஒன்று நடைபெறும் என்று ரோபால்லோ தெரிவித்திருக்கிறார்.

தேவை என கணிக்கப்பட்ட அளவுக்கான போதை மருந்தை அரசு வழங்கவில்லை. ஆனால், பெருமளவிலான போதை மருந்து பயன்பாட்டாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா?

உலகில் முதல்நாடாக உருகுவே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி அளிக்கிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்