எகிப்து : காப்டிக் தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 45 பேர் பலி

  • 9 ஏப்ரல் 2017

எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயங்களில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

குருத்தோலை ஞாயிறு திருப்பலியை அலெக்ஸாண்ட்ரியா பேராலயத்தின் தலைமை பேராயர் தலைமைத்தாங்கி நடத்திக் கொண்டிருந்த போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னிடம் இருந்த கருவியை வெடிக்கச் செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பேராயருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், 16 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

எகிப்து காப்டிக் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு; 21 பேர் பலி

முன்னர், வட எகிப்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.

ஐ.எஸ் குழுவினர் இத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்