"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?": ஒரு `போராளி'யின் உண்மைக் கதை

"கிம்மா இதனை தெரிவிப்பதில் வருந்துகிறேன். உங்களுக்கு கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்" என்கிற வார்த்தைகளை கேட்ட நேரம்தான் என்னுடைய வாழ்வில் இடி விழுந்தது போன்ற தருணம்.

"எனது 24வது வயதில் மாதவிடாய் நின்றுபோனது"

பட மூலாதாரம், Gemma-Louise Quinton

படக்குறிப்பு,

வாழ்வு தாழ்ந்துபோனதாக உணர்ந்தேன் - கிம்மா

இளம் வயதில், கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளான கிம்மா, புயலடித்த தனது வாழ்க்கையை எப்படி துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை அவரே விவரிக்கிறார்:

நான் இறந்துவிடுவேன், என்னுடைய 2 வயது மகனை தாயில்லாத குழந்தையாக விட்டுச்செல்ல போகிறேன் என்பது எனக்கு நிச்சயமாக தெரிந்தது.

தீவிர கதிரியக்க சிகிச்சை மற்றும் வேதியியல் சிகிச்சையால் (ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி) புற்றுநோயிலிருந்து என்னால் விடுபட முடிந்தது. ஆனால், அந்த சிகிச்சை என்னை கருவுற இயலாதவளாக்கிவிட்டது.

என்னுடைய இந்த கருவுற இயலாத தன்மையோடு, இனி வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டும். இதனால், "உண்மை"யான ஒரு பெண்ணை விட நான் தாழ்ந்தவள் என்பது போல உணர்ந்தேன்.

வழக்கமாக வருகின்ற மாதவிடாய் காலம் நின்றுவிடவில்லை. வயிற்று தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் கால ரத்தப்போக்குக்கு பிரியாவிடை வழங்க விரும்புகிறேன்.

ஆனால் சிலவேளைகளில், என்னுடைய நண்பர்களோடு இரவு வெளியே செல்கையில், எங்களுடைய ஒப்பனைகளை முடிக்கிற வேளையில், "இப்போது என்னுடைய மாதவிடாய் காலம்" என்று யாராவது சொன்னால், மிகவும் கோபமாக இருக்கும். திடீரென இது என்னை தாக்குகிறது. என்னுடைய நண்பர்களோடு பழக முடிவதில்லை அல்லது பெண்மை தன்மையோடு அமையும் பேச்சுகளில் சேர முடியவில்லை.

24-ஆவது வயதில் மாதவிடாய் நின்றுபோவதால் அனுபவிக்கும் மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு எதுவுமே உன்னை தயார் செய்வதில்லை.

பட மூலாதாரம், Gemma-Louise Quinton

படக்குறிப்பு,

புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டால், வெல்ல முடியாதவராக உணருவீர்கள்

மாதவிடாய் நின்றுப்போவதால் வருகின்ற பயங்கர சூடான வேர்வை, மனநிலை மாற்றங்கள், பதட்டம் அனைத்தும் மகிழ்ச்சி அளிப்பவை அல்ல.

நான் பிறரோடு இருக்கின்றபோது, என்னுடைய வேர்வை திட்டுகளை தொடர்ந்து மறைத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

எனக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களால், என்னுடைய காதலனுடன் பேச வேண்டிய அனைத்தையும் 10 நிமிடங்களில் பேசி முடித்துவிடுகிறேன். (இப்போது நாங்கள் ஒன்றாக இல்லை)

இப்போது எனக்கு 27 வயதாகிறது. ஒரு சாராசரி பெண்ணைவிட குறைந்தவளை போல நான் இப்போது உணர்கிறேன். நான் வழக்கமாக வேலை செய்வதைபோல எனது உடல் இப்போது ஒத்துழைக்கவில்லை.

என்னுடைய பெண் குறியானது மிகவும் உலர்ந்து விடுவது, மாதவிடாய் நின்றுவிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று. இதனால், புதியதொரு நபருடன் உடலுறவு கொள்ளலாம் என்று எண்ணுவது என்னை கடுமையாக மிரட்டுவது போலிருக்கும்.

புற்றுநோய் என்னுடைய பெண்மையை என்னிடம் இருந்து அகற்றிவிட்டதாக உணர்கிறேன்.

ஆண் நண்பரோடு டேட்டிங் செய்து மகிழ்வது தந்திரமானது. நானொரு உண்மையான பெண்ணாக இல்லாத நிலையில், ஓர் எதிர்கால காதலன் என்னவென்று எண்ணுவார்? என்னுடைய உடல் நிலை பற்றி விரும்பாததை கூறுவதுதான் என்னுடைய நேர்மையா?

பட மூலாதாரம், Gemma-Louise Quinton

படக்குறிப்பு,

அழகில்லாத ஹார்மோன் ஒட்டுக்களோடு, மந்த மனநிலையிலுள்ள ஒரு பெண் வாழவும் வேண்டுமா?

சில நாட்களுக்கு முன்னால்தான், நான் ஒருவரோடு இரவுவேளையில் டேட்டிங் செய்ய வெளியே சென்றேன். அவரை பார்ப்பதற்கு முன்னால் நான் மிக மோசமாக பயந்தே போய்விட்டேன்.

நான் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியாத நிலையில், எதிர்காலத்தில் குடும்பம் ஒன்றை உருவாக்க விரும்புகின்ற யாரோ ஓர் ஆணுடன் டேட்டிங் செய்வதில் நியாயமில்லையே என்று எண்ணினேன்.

இதனை விவாதிக்க வேண்டுமா அல்லது என்னுடைய தகவல்கள், பிரதான உணவுக்கு முன்னால் வழங்கப்படும் சிறு உணவுகள் வருவதற்கு முன்னாலேயே, அவரை ஒரு மைல் தொலைவு ஓட வைக்குமா? என்று எனக்கு தெரியவில்லை.

காணொளி: மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு

காணொளிக் குறிப்பு,

மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுப்பு

அவர் அதிக குழந்தைகளை விரும்புகிறாரா என்று அவரிடம் கேட்டேன். எனக்கு நிம்மதி கிடைக்கும் வகையில், அவர் கொண்டிருக்கும் ஒரு குழந்தையோடு மட்டுமே வாழ்வதில் அவர் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். ஆனால், அடுத்த டேட்டிங் எப்போது வைத்து கொள்ளலாம் என்று அவர் கேட்கவில்லை.

என்னுடைய விஷயங்கள் அனைத்தும் அவரை மௌனமாக போக செய்துவிட்டன போலும்.

மேலும், மாதவிடாய் நின்றுவிடுவதால் தோன்றும் அறிகுறிகளில் இருந்து விடுபடுவதற்காக நான் பெற்றிருந்த ஹார்மோன் மாற்று சிகிச்சையால் பெற்ற ஒட்டுக்களாலும் அவ்வாறு அவர் மறுபடியும் சந்திக்க தேதி கேட்காமல் போயிருக்கலாம்.

அழகில்லாத ஹார்மோன் ஒட்டுக்களோடு, மந்த மனநிலையிலுள்ள ஒரு பெண் வாழவும் வேண்டுமா? என்று சிலவேளைகளில் நான் நினைத்ததும் உண்டு.

பட மூலாதாரம், Gemma-Louise Quinton

படக்குறிப்பு,

எனக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களால், என்னுடைய காதலனுடன் பேச வேண்டிய அனைத்தையும் 10 நிமிடங்களில் பேசி முடித்துவிடுகிறேன்

எனக்கான நல்லதொரு மனிதர் என்னை அன்பு செய்வார் என்று என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் என்னிடம் கூறுவர். எனவே, அனைத்து நிகழ்வுகளின் நல்ல பக்கத்தை பார்க்க முயன்றேன்.

என்னுடைய அழகான வீட்டில் எனது மகனோடும். செல்ல நாயோடும் எனக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்துள்ளது.

நான் என்னுடைய மகனோடு எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக பயணம் மேற்கொண்டு சுற்றி வருகிறேன்.

கருப்பை உயிரணு சோதனையை மேற்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறேன்.

என்னால் இந்த சோதனையை செய்து கொண்டதாக ஒரு பெண் கூறினால், என்னுடைய அனுபவத்தால், பிறரின் வாழ்க்கைக்கு உதவக்கூடிய பணியை செய்து வருவதாக உணர்கிறேன்.

எதிர்காலத்தில் எனக்கு வேறு குழந்தைகள் இருக்காது என்பதால், நான் எப்போதும் மனமுடைந்து கவலைப்படுபவராகத்தான் இருப்பேன் என்பதை நான் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், எதுவும் என்னை பயமுறுத்தாது. நீங்கள் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டால், வெல்ல முடியாதவராக உணருவீர்கள்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்