கலிஃபோர்னியா மாநில பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோவில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியின் வகுப்பறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயது வந்தோர் இருவரும், ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாக்குதாரி மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம், SAN BERNADINO POLICE

படக்குறிப்பு,

உயிரிழந்த தாக்குதாரி மற்றும் அவரது மனைவி

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், ஆசிரியையான பிரிந்து சென்ற தன் மனைவியை கொன்றுள்ளார். மேலும், தனது மனைவியின் பின்னால் இருந்த இரண்டு குழந்தைகள் அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். இதில் ஒரு குழந்தை உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், தாக்குதல்தாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.

பட மூலாதாரம், AFP

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

கடந்த 2015 - ஆம் ஆண்டு டிசம்பரில், சான் பெர்னார்டினோ நகரில் உள்ள ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையமொன்றில் நுழைந்த ஒரு தம்பதியர், அங்கிருந்த சுகாதார பணியாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போது 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்