சென்னை அண்ணா சாலையில் மீண்டும் விரிசல்

ஞாயிறன்று ஏற்பட்ட பள்ளம்
படக்குறிப்பு,

அண்ணா சாலையில் ஞாயிறன்று ஏற்பட்ட பள்ளம்

சென்னை அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் அருகே இன்று செவ்வாய்கிழமை காலை திடீரென விரிசல் ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் பள்ளம் விழுந்த பகுதியின் மிக அருகிலேயே இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள விரிசலால் எந்தவிதமான வாகன விபத்துக்களும் ஏற்படவில்லை என்றாலும், போக்குவரத்தில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்பட்டுள்ள சாலை பகுதியை தடுப்புகள் கொண்டு தடுத்து, அப்பகுதியில் விரிசலை சரி செய்யும் பணியை மெட்ரோ தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பணிகள் ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து மீண்டும் போக்குவரத்து சீர் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் சமயத்தில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதால், இப்பகுதிகளுக்கு அருகே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

காணொளிக் குறிப்பு,

திடீர் பள்ளத்தால் அண்ணா சாலையில் நான்கு மணி நேரமாக ஸ்தம்பித்த போக்குவரத்து

இன்று ஏற்பட்டுள்ள விரிசலை சரியான நேரத்தில் அதிகாரிகள் கண்டு அதை சரி செய்யும் பணியை துவங்கியுள்ளதால், நேற்றுமுன்தினம் ஏற்பட்டது போன்ற பள்ளம் ஏற்படாமலும், விபத்துகள் ஏற்படாமலும் தடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணொளிக் குறிப்பு,

சீரமைக்கப்பட்ட சென்னை அண்ணா சாலை

எனினும் சாலையை சீரமைக்கும் பணி என்பது தற்காலிகமானதாக மட்டும் இல்லாமல், இப்பகுதியில் மீண்டும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையை மெட்ரோ மற்றும் அரசு ஆதரிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் கோரியுள்ளார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்