ஐ.நாவின் அமைதிக்கான இளம் தூதர் மலாலா

நோபல் பரிசை வென்றுள்ள மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகியுள்ளார்.

மலாலா

பட மூலாதாரம், AFP/Getty images

தற்போது பிரிட்டனில் "ஏ" லெவல் வகுப்புகளில் இருக்கும் 19 வயதாகும் மலாலாவிற்கு, புகழ்பெற்ற பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது; பெண் கல்வியில் சிறப்பு கவனத்தை செலுத்தும் வகையில் மலாலா அந்த வாய்ப்பை ஏற்கவுள்ளார்.

2012 ஆம் ஆண்டு, கல்வி பெறுவதில் பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தாலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார் மலாலா.

நியூ யார்க்கில் பட்டத்தை பெற்று கொண்டு பேசிய மலாலா, "மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்குகிறது, மேலும் அது இப்போதே தொடங்க வேண்டும்". என தெரிவித்தார்.

"உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் யாருக்காகவும் காத்திராமல் தற்போதே செயல்பட தொடங்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

ஐ.நாவின் பொதுச் செயலர் ஆண்டோன் யுகோடேரிஷ், "உலகில் மிக முக்கியமாக கருதப்படும் கல்வியின் சின்னம்" என மலாலாவை புகழ்ந்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

கடந்த மாதம் தனது "ஏ" லெவல் வகுப்புகளில் மூன்று ஏ க்களை பெறும் பட்சத்தில், அரசியல், தத்துவம், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பயில பிரட்டன் பல்கலைக்கழகம் ஒன்றிடமிருந்து வாய்ப்பு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் எந்த பல்கலைக்கழகம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என அவர் தெரிவிக்கவில்லை.

மலாலா தொடர்பான பிற செய்திகள்:

பாகிஸ்தானில் தனது பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா சுடப்பட்டு, கடும் போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்தார்.

முன்னதாக, ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொள்ள நேர்காணலில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

கலை, இலக்கியம், அறிவியல், பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பொது வாழ்வுடன் தொடர்புடைய பிற துறைகளிலிருந்து ஐ.நாவின் அமைதிகான தூதராக தேர்வு செய்யப்படுவர்.

இதுவரை தூதராக இருந்தவர்களில் முகமது அலி, ஜார்ஜ் க்ளூனி, மைகல் டெக்லஸ், லியனார்டோ டி கார்பியோ, ஸ்டீவ் வோண்டர் மற்றும் ஷார்லீஸ் திர்ரன் ஆகியோர் அடங்குவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்