ஸ்டாக்ஹோம்: தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக ஒப்புக்கொண்டார் சந்தேக நபர்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் லாரி தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ரஹமத் அகீலெஃப், இந்த தீவிரவாத தாக்குதலை தானே நடத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Swedish police
Image caption தேசிய பாதுகாப்பு சேவைகளுக்கு அகீலெஃப் அறிமுகமானவர்

ஸ்வீடனின் தலைநகரில் பலத்த காவலில் விசாரணை நடத்தப்பட்டபோது அவர் தாக்குதலை நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

39 வயதான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ரஹமத் அகீலெஃப், நீதிமன்றத்தில் இதனை ஒப்பு கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை பேரங்காடி ஒன்றில் லாரியை ஓட்டிச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

ஸ்டாக்ஹோம்: தாக்குதல் லாரியில் சந்தேகத்துக்குரிய பொருள்

ஸ்டாக்ஹோம் லாரி தாக்குதலில் கைதானவர் லாரி ஓட்டுநர்

அவர் ஒரு தீவிரவாத குற்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதன் மூலம் தான் கைது செய்யப்படுவதை ஏற்பதும்தான் அவருடைய நிலை என்று அந்த வழக்கறிஞர் ஜோஹான் எரிக்சன் கூறியிருக்கிறார்.

கைகளில் விலங்கிடப்பட்டு ரஹ்மத் அகீலெஃப் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

பாதுகாப்பு பலமாக இருந்தது. செய்தியாளர் கூடம் நிறைந்திருந்தது என்று ரகசியமாக நடத்தப்பட்ட நீதிமன்ற அமர்வை பற்றி பிபிசி செய்தியாளர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிப்ரவரி மாதம் தலைமறைவாகி விட்ட அவர் தேடப்படும் நபர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்பட்டார்

தேசிய பாதுகாப்பு சேவைகளுக்கு அகீலெஃப் தெரிந்திருந்தவரே என்று ஸ்வீடன் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

ஸ்வீடனில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்ட அவர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரத்தமும் கண்ணாடியும் ஒட்டியிருந்த நிலையில், தாக்குதல் இடத்தில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சில மணிநேரங்களுக்கு பிறகு ஸ்டாக்ஹோமின் வடக்கில் புறநகரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்டாக்ஹோம் தாக்குதல்: கைதானவரோடு வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம்

சர்வதேச ஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு

காணொளி: ஸ்வீடன் இசை நிகழ்ச்சியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்

அகீலெஃப், உஸ்பெகிஸ்தானில் மனைவி மற்றும் 4 குழந்தைகளை விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதற்காக வந்தவராக தெரிகிறது.

2014 ஆம் ஆண்டு ஸ்வீடனில் தங்கியிருப்பதற்கு விண்ணப்பித்த அவருக்கு 4 மாதங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஜோனாஸ் ஹைசிங் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் தலைமறைவாகிவிட்ட அவர் தேடப்படும் நபர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு பிறகு தேசிய தீவிரவாத சட்டங்களை இன்னும் கடுமையாக்க முயல்வதாக ஸ்வீடன் நீதித்துறை அமைச்சர் மோர்கான் ஜோஹான்சன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்திகளையும் நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஸ்வீடன் தலைநகரில் தாக்குதல்

ஸ்டாக்ஹோம் தாக்குதல்: கைதானவரோடு வேறு நபர்களும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம்

கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அமல்படுத்தும் ஸ்வீடன் அரசாங்கம்

கொல்லப்பட்ட வங்கதேச எழுத்தாளர் விசா விண்ணப்பத்தை ஸ்வீடன் மறுத்தது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்