`மாணவ, மாணவியர் உள்ளாடை அணியவும் தடை விதித்து ராக்கிங்': 28 பேர் மீது நடவடிக்கை

இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற பகிடிவதை(ராக்கிங்) தொடர்பாக 18 மாணவிகள் உட்பட 28 மாணவர்கள் ஒரு மாத காலம் வகுப்புக்களில் பங்கேற்க பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிரயோக விஞ்ஞான பிரிவை சேர்ந்த 2ம் வருட மாணவர்களில் குறிப்பிட்ட 28 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிரும்பவதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

பகிடிவதை காலத்தில் புதிய மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளாடை அணியவும், தடை விதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக, பிபிசி தமிழோசையிடம் பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் ''மாணவர்களுக்கு உள் பனியன் அணியவே அவர்களால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எப்படி இருந்தாலும் உள் பனியன் உள்ளாடைகளில் ஒரு பகுதி தானே? '' என்றார்.

மூவர் உயிரிழக்க காரணமான கந்தூரி உணவு விவகாரம்: 2 சமையல்காரர்கள் கைது

கந்தூரி உணவு நஞ்சான சம்பவம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

''மாணவிகள் உள்ளாடை அணிய தடை விதிக்கப்பட்டமை தொடர்பாக எந்தவொரு புகாரும் கிடைக்கவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார்

படத்தின் காப்புரிமை AFP

''பிரயோக விஞ்ஞான பீடம் அமைந்துள்ள சம்மாந்துறை வளாகத்தில் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட புதிய மாணவ, மாணவிகள், தங்களுடைய ஆடைகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளை போன்று நடத்தப்பட்டுள்ளனர். இதனால் புதிய மாணவ, மாணவிகள் மிகுந்த பயத்துடன் காணப்படுகின்றனர்" என்றும் அவர் கூறுகிறார்.

பகிடிவதைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மருந்து வில்லைகள், ஒரு வகை ஆயுர்வேத திரவம் மற்றும் வேறு தடயங்களும் கைப்பற்றப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இலங்கை: கடந்த ஆண்டை காட்டிலும் மிகவும் அதிகரித்துள்ள டெங்கு நோய்

வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் மூடல்

இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவம் ஆபத்து

"சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இரு விரிவுரையாளர்களை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் பகிடிவதை தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகத்தின் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளமைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் துனை வேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் கைது

இதே கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற பகிடிவதை தொடர்பாக கைதான 15 சிரேஷ்ட மாணவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவில் இலங்கை ஜனாதிபதி திடீர் ஆய்வு

இலங்கையில் மன அழுத்த நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்ன?

சந்தியா ஏக்னலிகொடாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விருது

குறிப்பிட்ட மாணவர்கள் 15 பேரும் இன்று செவ்வாய்கிழமை கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் போலீஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவை பிறப்பித்தது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்