அமெரிக்காவில் அதிகரிக்கும் தடுப்பூசி எதிர்ப்பு

அமெரிக்காவில் அதிகரிக்கும் தடுப்பூசி எதிர்ப்பு

ஆண்டுதோரும் தடுப்பூசிகள் உலக அளவில் கோடிக்கணக்கான உயிர்களை பாதுகாக்கின்றன.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விஞ்ஞான ரீதியில் உறுதியாகாத கருத்துக்களின் அடிப்படையில் தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து ஆராய குழு அமைக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகம்.

ஆனால் சில பெற்றோர் தம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதனால் அவர்கள் வாழும் இடங்களிலுள்ள மற்ற குழந்தைகளுகான ஆபத்து அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றான வாஷிங்க்டன் மாநிலத்திலுள்ள வாஷன் தீவின் நிலைமையை நேரில் ஆராய்ந்தது பிபிசி.