லண்டன் – இரான் வரை: தனியொரு பெண்ணின் மிதிவண்டி பயணம் (புகைப்படத் தொகுப்பு)

லண்டன் முதல் இரான் வரை தனியாக - ஒரு பெண்ணின் மிதிவண்டி பயணம்
படக்குறிப்பு,

தன்னுடைய மிதிவண்டி மௌடுவுடன் ரெபேக்கா லோயிஸ்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து இரானுக்கு ஓராண்டு காலம் மிதிவண்டியில் ரெபேக்கா லோயிஸ் 7 ஆயிரம் மைல் பயணிக்க தொடங்கியபோது, அவருக்கு பித்துப் பிடித்துவிட்டது என்றே அவருடைய நண்பர்கள் நினைத்தனர்.

எகிப்தில் இருந்து துருக்கி, தெற்கிலிருந்து ஓமனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன்னால் எகிப்து மற்றும் சூடான் என்று மிதிவண்டியில் பயணித்த அவர், இரானில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார்.

"மத்திய கிழக்கு நாடுகளின் குறுக்கே மிதிவண்டியில் பெண்ணொருவர் தனியாக பயணிப்பது முட்டாள்தனமானதா? என்ற தலைப்பில் பிபிசி நியூஸ் இணையதளத்தில் அவர் எழுதிய கட்டுரை வாசகர்களிடம் இருந்து அதிக அளவிலான ஆர்வத்தை ஈர்த்தது.

அவருடைய பயணத்தை இங்கு புகைப்படங்களில் விவரிக்கிறார்.

அல்பேனியாவின் எல்லையிலுள்ள மொன்டெனேகுரோவின் மேல் புரெக்லிடிஜி மலைத்தொடரின் உச்சியில் ஓய்வு பெறுகின்ற என்னுடைய மிதிவண்டி "மௌடு". மிகவும் வருத்துகின்ற மலையேற்றம் முற்றிலும் சமமற்ற அபரிமிதமான சாதனை உணர்வை எனக்கு வழங்குகிறது.

தெளருஸ் மலைத்தொடரின் வழியில் பனிமூட்டத்தில் பழுதான மிதிவண்டி. 3.400 மைல்கள் சாலையில் ஓடியே பின்னர் மோசமான மௌடுவின் காகித தடிம டயர்களில் ஒன்று.

சிரியாவின் எல்லைக்கு அருகில், லெபனானின் பிக்கா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள முறையற்ற சிரியா அகதிகள் முகாம். மழை மற்றும் பனியால் கூடாரங்கள் சேறாகவும், ஈரமாகவும் உள்ளன. ஒவ்வொரு முகாமிலும் சுமார் 10 பேர் வாழ்கின்றனர்.

அம்மான், ஜோர்டான் மற்றும் சாக்கடலுக்கு இடையில், கவனக்குறைவுடன் நான் முக்கிய கீல் சாலையை கடந்த பின்னர், எடுத்த மாற்றுப்பாதை.

சூடானில் சஹாரா வழியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மிதிவண்டியில் பயணம். ஒரு சமயம் தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. நீர்சத்து இழப்பையும் அனுபவித்தேன். தலைசிறந்த நியூபியா குடும்பத்தினரால் பழைய உடல்நலம் பெற்றேன்.

புகைப்படக்குண்டு! சூடானில் கார்ட்டூமுக்கு அருகில், விற்பவர் மற்றும் முரட்டு ஆதாய நோக்கமுடையவர். ஒரு வாரத்திற்கு இருமுறை சுமார் 350 விற்கப்படுகின்றன.

சுரண்டலாலும், காவல்துறையினரின் கொடுமைகளாலும் அவதிப்படும் காட்டூமிலுள்ள தேயிலை பறிக்கும் பெண்கள். 2016 ஆம் ஆண்டு தேயிலை கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியதை பாராட்டி அவாதியா மகமத்தியாவுக்கு (வலது) அமெரிக்க சர்வதேச தீர விருது வழங்கப்பட்டது.

இரானின் தெற்கு பகுதியில் இருந்து நூல் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட போரிகி முகமூடிகள் அணிந்த ஷியா முஸ்லிம் பன்டாரி பெண்கள்

மௌடுவின் இரண்டாவது இணை டயர்களிலும் காற்று போய்விடவே, இரானிய மலைத்தொடரான அப்வானிக்கு அருகில் பழுதடைந்த மிதிவண்டி. தங்களுடைய உற்பத்திப் பொருட்களை மிகுந்த சிரமத்துடன் எடை போட்டுக் கொண்டிருந்த சில ஆட்டு இடையர்களால் அதிஷ்டவசமாக நாங்கள் மீட்கப்பட்டோம்.

புகைப்படங்கள்: ரெபேக்கா லோயிஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்