பூனைகளைப் பற்றி 10 ருசிகர தகவல்கள்

பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?

பூனை

பட மூலாதாரம், Getty Images

  • சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
  • பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
  • பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
  • அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
  • பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
  • பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
  • பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது.
  • பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.
  • பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
  • பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்