பெரும் ஆபத்தில் ஜப்பானிய பெருநிறுவனங்கள்

டோஷிபா, பானாசோனிக், சோனி, ஹிட்டாசி போன்ற பெயர்கள் நுகர்வோர் சந்தையில் முன்னணியில் இருந்தன. ஆனால் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புச் சந்தையில் சீனா மற்றும் கொரியா நுழைந்ததை அடுத்து ஜப்பானிய நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஜப்பானின் பன்னாட்டு பெருநிறுவனமான டொஷிபா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாக தெரிவித்துள்ளது.

தமது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் டோஷிபா எச்சரித்திள்ளது. இந்த நிலைமை எதனால் என ஆராய்கிறது பிபிசி.