ஆஃப்கானிஸ்தான் : அரசு ஊழியர்களை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்; 5 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களை சம்பவ இடத்தில் நேரில் பார்த்தவர்கள் உறுதி செய்தனர்.

ஒரு இணைய பதிவில், ஐ.எஸ் குழு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ் குழுவினர் தீவிரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்