இனி 'நேட்டோ' பயனற்ற அமைப்பல்ல’: நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப்

தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி நேட்டோ அமைப்பு இனி வழக்கற்ற நிலையில் உள்ள ஓர் அமைப்பு அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது, நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு எச்சரிக்கை உண்டாக்கியுள்ளது.

நேட்டோ குறித்து நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நேட்டோ குறித்து நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப்

வெள்ளை மாளிகையில் நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கை சந்தித்த டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் நேட்டோ கூட்டணியின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுவதாக குறிப்பிட்டார்.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ கூட்டாளிகளுக்கு கூடுதல் உதவிகள் செய்யுமாறு டிரம்ப் நேட்டோ அமைப்பை கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, நேட்டோ அமைப்பின் நோக்கம் குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பிய டொனால்ட் டிரம்ப், நேட்டோ உறுப்பினர்களில் அமெரிக்கா கூடுதல் பாரத்தையும், செலவையும் ஏற்பது நியாயமல்ல என்று குறை கூறியது குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு,

'இனி நேட்டோ அமைப்பு பயனற்ற அமைப்பல்ல'

ஸ்டோல்டென்பெர்குடன் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் டிரம்ப் கூறுகையில், ''பயங்கரவாதத்தை எதிர்த்து நேட்டோ அமைப்பு இன்னும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நானும் நேட்டோ பொது செயலாளரும் ஓர் ஆக்கப்பூர்வமான விவாதம் மேற்கொண்டோம்'' என்று தெரிவித்தார்.

''முன்பு நேட்டோ குறித்து நான் புகார் தெரிவித்தேன். தற்போது அவர்கள் பயங்கரவாத்துக்கு எதிராக போராடுகின்றனர். அவர்கள் தங்களின் செயல்பாட்டில் ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளனர்'' என்று கூறிய டிரம்ப், ''முன்பு நேட்டோ அமைப்பு வழக்கற்ற நிலையில் உள்ள அமைப்பு என்று நான் கூறியிருந்தேன். இனி நேட்டோ அமைப்பு வழக்கற்ற நிலையில் உள்ள அமைப்பு அல்ல'' என்று மேலும் தெரிவித்தார்.

ஆனால், நேட்டோ உறுப்பினர் நாடுகள் இந்த கூட்டணி அமைப்பின் செயல்பாட்டுக்கு கூடுதல் நிதியினை தங்களின் பங்காக வழங்க வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

காணொளிக் குறிப்பு,

அமெரிக்க பெருமையை மீட்பேன் என்கிறார் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்