தைவானில் நாய் மற்றும் பூனைக்கறிக்குத்தடை

தைவானியர்களால் இனிமேல் நாய் மற்றும் பூனைக்கறியை சாப்பிட முடியாது.

காரணம் செல்லப்பிராணிகளை உணவுக்காக கொல்வதை தடுக்கும் சட்டத்தை தைவான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை அளிக்கப்படும்.

சட்டத்தை மீறுபவர்களின் பெயரும் புகைப்படங்களும் பகிரங்கமாக வெளியிடப்படும்.

வரலாற்றுரீதியில் தைவானில் நாய்க்கறி சாப்பிடுவது இயல்பான ஒன்று.

ஆனால் சமீபகாலங்களில் அது படிப்படியாக மாறிவருகிறது.

விலங்குகளை பாதுகாக்கும் சட்டங்களை தைவானில் வலுப்படுத்தவிரும்புவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

2001ஆம் ஆண்டு செல்லப்பிராணிகளின் கறியும் தோலும் பணத்திற்கு விற்கப்படுவதை தடுத்து தைவான் அரசு சட்டமியற்றியிருக்கிறது.