பாலியல் வல்லுறவும் போராயுதமாகும் நாட்டில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்?

பாலியல் வல்லுறவும் போராயுதமாகும் நாட்டில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்?

உலகிலேயே பெண்கள் வாழ கடினமான இடங்களில் தென் சூடானும் ஒன்று என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பேறுகாலத்தில் பெண்கள் இறப்பது உலகிலேயே இங்கு தான் மிக அதிகம்.

வெறும் ஆறு சதவீத பெண் குழந்தைகளே ஆரம்ப பள்ளிக்கல்வியை முடிக்கிறார்கள்.

பதினைந்து வயது பெண், ஆரம்ப பள்ளிக்கல்வியை நிறைவு செய்வதைவிட பேறு காலத்தில் இறப்பதற்கான சாத்தியமே இங்கு அதிகம். இதற்கெல்லாம் உச்சமாக இங்கு நீடிக்கும் உள்நாட்டுப்போரில் பாலியல் வல்லுறவு என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பின்னணியில் அங்குவாழும் மூன்று பெண்களிடம் பேசியது பிபிசி.