186 குழந்தைகளை பலிகொண்ட பெஸ்லன் முற்றுகை : ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நீதிமன்றம் கண்டனம்

ரஷ்யாவில் உள்ள பெஸ்லனில் 2004 ஆம் ஆண்டு பள்ளி ஒன்று முற்றுகையிடப்பட்டத்தை ரஷ்யா தடுத்திருக்கலாம் என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணொளிக் குறிப்பு,

“186 சிறாரைக்காக்க ரஷ்ய அரசு தவறிவிட்டது”

இந்த முற்றுகையின்போது, 330 பேர் பலியானார்கள்.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து, அமைக்கப்பட்ட விசாரணையும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

பட மூலாதாரம், AFP

முற்றுகை நடவடிக்கையில் செசென் போராளிகள் 1000க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக எடுத்தது.

அதில், பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.

ரஷ்ய படைகள் கட்டடத்திற்குள் நுழைந்து முற்றுகை நிலையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பட மூலாதாரம், AFP

அளவுக்கதிகமான படையை துருப்புகள் பயன்படுத்தியதாக சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று எந்த ரஷ்ய அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை.

பலியானவர்களில் 186 குழந்தைகளும் அடங்குவார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்